புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 02, 2020)

அடைக்கலமான தேவன்

சங்கீதம் 46:10

நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்;


கர்த்தருடைய கரம் எகிப்தின் மேல் கடினமாக இருந்ததால், அந்த ராஜ்யத்தின் ராஜாவாகிய பார்வோன், அடிமைத்தனத்திலிருந்த தேவனு டைய ஜனங்களை போகும்படி இடங் கொடுத்தான். கர்த்தருடைய பலத்த செய்கையை கண்ட தேவனு டைய ஜனங்கள் ஆரவாரத்தோடு எகிப்தைவிட்டுப் புறப்பட்டுப் போனார் கள். அவர்கள் செங்கடலருகே வந்து பாளயம் இறங்கினார்கள். பார்வோ னின் மனம் மறுபடியும் கடினப்பட்டு, தேவ ஜனங்களை பின்தொடர்ந்து, பிரதான இரதங்களோடு வந்தான். முன்பாக செங்கடலும், பின்பாக பார்வோனின் படையையும் கண்ட ஜனங்கள், பயந்து, கலக்கமடைந்து, கர்த்தர் செய்த பலத்த செய்கைகளை மறந்து போனார்கள். எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங் களைக் கொண்டுவந்தீர்? என்று மேசேயிடம் முறையிட்டார்கள். கர்த்தர் செங்கடலை பிளந்து, அதன் வழியாக தம்முடைய ஜனங்களை நடத்திச் சென்றார். பார்வோனின் சேனையும், அதன் வழியாக பின் தொடர்ந்த போது, ஆழி அவர்களை மூடி அவர்களை அழித்துப் போட்டது. ஜனங்கள் ஆர்ப்பரித்து மகிழ்ந்து பாடினார்கள். கர்த்தரைத் துதித் தார்கள். மூன்று நாட்களுக்கு பின்பு, தாங்கள் இருக்கும் இடத்தில் குடி க்கத் தண்ணீர் இல்லை என்று முறுமுறுக்கத் தொடங்கினார்கள். அதா வது, எதிரிடையான சூழ்நிலைகள் வரும் போது கர்த்தரையும் அவரு டைய செய்கைகளையும் சீக்கிரமாய் மறந்து, வழுவிப் போகும் இருதய முடையவர்களாக இருந்தார்கள். எங்களுடைய வாழ்விலும், க~;டங் கள் சூழ்ந்து கொள்ளும் போது, சூழ்நிலைகளை கண்டு, நாங்களும் நிலை தவறிப்போகும் நேரங்கள் ஏற்படுவதுண்டு. வாழ்வின் உயர்வான நேரத்தில் ஆர்ப்பரித்து துதிப்பதும், சாதகமற்ற சூழ்நிலைகளிலே நம் பிக்கை இழந்தவர்களைப் போல முறுமுறுக்கவும் கூடாது. மாறாக “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூ லமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலை கள் நடு ச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்த ளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பய ப்படோம்.” என்று சங்கீதக்காரன் கூறியது போல நாங்கள் எங்கள் தேவன்மேல் நம்பிக்கை வைத்து, அவருடைய கரத்தின் பல த்த கிரியையை மறுபடியும் காணும்வரைக்கும் பொறுமையோடு அவ ரைத் துதித்து கொண்டு காத்திருக்க வேண்டும்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, என் வாழ்க்கையில் ஏற்படும் எதிரிடையான சூழ்நிலைகளை கண்டு மருளாதபடிக்கு, அந்த வேளைகளிலும் உம்முயை நேரத்திற்காக காத்திருக்கும் உள்ளத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாத் 14:13