புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 31, 2020)

அழைப்பின் மேன்மை

மத்தேயு 13:46

அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.


பதின்மூன்று வயதையுடைய சிறுபையன், ஒரு நாள் தன் தந் தையாரோடு பட்டணத்திலுள்ள கடைக்கு சென்ற போது, அவ்விடத் திலே, இசைக் கருவிகள் விற்கும் கடையொன்று புதிதாக போடப்ப பட்டிருப்பதை அவதானித்தான். அந்தக் கடையின் காட்சி ஜன்னல் வழியாக அங்கே ஒரு கிற்றார் வைத்திருப்பதைக் கண்டு மிகவும் பரவசம் அடைந்தான். எப்படியாவது அந்த கிற்றாரை தனதாக்கி கொள்ள வேண்டும் என்று தன் மனத்திலே நிச் சயித்துக் கொண்டான். வீடு திரும்பிய தும், அந்த கிற்றாரை தனக்கு வாங் கித் தரும்படியாக தன் பெற்றோரிடம் வருந்தி கேட்டுக் கொண்டான். இப் போது வாங்கி தருவதற்கு எங்களிடம் பணம் இல்லை. உன் பாடங்களை ஒழுங்காக படி, வீட்டு வேலை களிலே கவனமாக இரு, அதன்பின் கிற்றாரை குறித்து பார்க்கலாம் என்று கூறினார்கள். அன்றிலிருந்து அவன் தன் பாடங்களிலே மிகவும் கவனமாக இருந்து வந்தான், வீட்டு வேலைகளை சீக்கிரமாய் முடித் துக் கொண்டான். தனக்கு பிறந்த நாளுக்கு, கிறிஸ்மஸ் புதுவருடத் திற்கோ எந்த பரிசுப் பொருளும், புத்தாடைகளும் வேண்டாம், அதற்கு பதிலாக அந்த கிற்றாரை வாங்கி தாருங்கள் என்று கூறி தனக்கு கிடைக்கும் சில்லறைப் பணத்தையும் சேமிக்க ஆரம்பித்தான். அந்த கிற்றாரை பெற்றுக் கொள்ளும்வரைக்கும் அவன் ஓய்ந்து போகவி ல்லை. ஏனெனில் அது அவன் இருதயத்தின் பொக்கிஷமாக இருந் தது. அந்த சிறுபையனின் பரவசத்தையும், சந்தோ~த்தையும் உற்சாக த்தையும் எண்ணிப் பாருங்கள். மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத் துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலை யுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற் றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான் என்று பரலோக ராஜ்ய த்தைக் குறித்து இயேசு ஒரு உவமையைக் கூறினார். இந்த உலகிலே வாழும்வரை அந்த சிறுபையனுக்கு இருந்த கடமைகளைப் போல எங்களுக்கும் நாளாந்த கடமைகள் இருக்கின்றது. அந்த கிற்றாரைப் பெற்றுக் கொள்வதற்கு தன் வாழ்விலே எந்த தடையையும் அவன் வைத்துக் கொள்ளவில்லை. அது போலவே, பரலோக ராஜ்யத்தை சுத ந்தரித்துக் கொள்ளும்படிக்கு நாங்களும் எங்கள் இருதயத்தின் பொக் கிஷமாக அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

பரலோக தந்தையே, பரலோக ராஜ்யத்தை சுதந்ததிரித்துக் கொள்ளும்படிக்கு நீர் எங்களுக்கு கொடுத்த மேன்மையான அழைப்பை கருத்தோடு காத்துக் கொள்ள உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:21