புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 30, 2020)

எங்கள் ஆறுதல் வலையம்

பிலிப்பியர் 2:15

கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றபிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,


“உங்கள் சௌகரியமான தேறுதல் வலையம் (comfort Zone) அல்லது உங்களுக்கு ஏற்றபடி இருக்கும் வாழ்க்கை வட்டத்ததைவிட்டு வெளி யே வரவேண்டும், நாகரீகமானவைகளை கற்றுக் கொள்ள வேண்டும், உலகில் நூதனமானவைகளை அறிந்து கொள்ள வேண்டும், புதிய காரியங்களை செய்ய வேண்டும், உங்கள் வாழ்க்கையை உலக போக் கின்படி மாற்றிக் கொள்ள வேண் டும்” என்று தொனிக்கும் பல சத்தங் களை கேட்டிருக்கலாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே, தம்முடைய சீ~ர்களை ஊழியத்திற்கு அனுப்பும் போது, “ஆடுகளை ஓநாய்களுக்கு ள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகை யால், சர்ப்பங்களைப்போல வினாவு ள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.” என்று கூறினார். வசீகராமாக வஞ்சிக்கும் உலக பேச்சுக்களை குறித்து எச்சரிக்கையாயிருங்கள். அவை “புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்கதாவும” இருக்கும். இயேசுவின் வார்த்தை எங்களிலும் நாங்கள் இயேசுவிலும் நிலைத்திருப்பதே எமக்குரிய தேறுதலைக் கொடுக்கக்கூடிய வலையம் (comfort Zone) என்பதை ஒரு போதும் மறந்து போய்விடாதிருங்கள். அதற்கு வெளியே இருந்தால் சீக்கிரமாய் இயேசுவிடம் திரும்புங்கள். அதை செய்தால் பாவமா? இதைப் பார்த்தால் குற்றமா? அதைத் தொட்டால் அசுத்தமா? என்று பலர் கேள்விகளுக்கு மேல் கேள்வி களை கேட்கின்றார்கள். நாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய காரி யமாவது “தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய்” கூறப்படும், சொல்லப்படும், செய்யப்படும் எல்லா காரியங்களும் ஈற்றிலே எங் களை படுகுழியில் விழச் செய்துவிடும். கொஞ்சக் காலம் இந்த பூமி யிலே வாழ்;கின்ற நாங்கள், உலகத்திலே பல காரியங்களை கற்கின் றோம், கேட்கின்றோம், பார்க்கின்றோம். ஆனால் அவைகள், நீங்ககள் பெற்றிருக்கும் அதி உன்னதமான அழைப்பின் மேன்மையை உணரமு டியாமல் உங்கள் மனக்கண்களை இருளடையச் செய்யாதபடிக்கு எச்ச ரிக்கையுள்ளவர்களாக இருங்கள். கறை படுத்தாதபடிக்கு தேவனுடைய சித்தம் உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேறுவதற்கு தடையாக இரு ந்தால், அவைகளை விட்டு விலகுங்கள்.

ஜெபம்:

சகலவித ஆறுதலின் தெய்வமே, இந்த உலகத்தின் வஞ்சனை க்குத் தப்பி, உம்முடைய வார்த்தையின்படி வாழும்படிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களைத் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28