புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 29, 2020)

தேவன் என்னோடு இருக்கின்றாரா?

அப்போஸ்தலர் 3:6

வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என் னிடத்திலுள்ளதை உனக் குத் தருகிறேன்.


பேதுரு யோவான் என்னும் தேவ ஊழியர்கள் ஜெபம் செய்யும்படி தேவாலயத்துக்குப் போனார்கள். அப்பொழுது தன் தாயின் வயி ற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனு~னானவன் தேவாலயத் திற்குள் பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சைகேட்டான். ஆனால் பேதுருவும் யோவானும் அவனை உற்றுப் பார்த்து: எங்களை நோக்கிப்பார் என் றார்கள். அவன் அவர்களிடத்தில் ஏதா கிலும் கிடைக்குமென்று எண்ணி, அவ ர்களை நோக்கிப்பார்த்தான். அப்பொ ழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை. என்னிடத்திலுள் ளதை உனக்குத் தருகிறேன்; நசரேய னாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தி னாலே நீ எழுந்து நட என்று சொல்லி வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவ னுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. இன்றைய நாளிலே இந்த சம்பவத்தில் “என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகின்றேன்” என்பதைக் குறித்து தியானிப்போம். கர்த்தராகிய இயேசுவின் சீ~ர்களா கிய பேதுரு, யோவனிடம் பணம் ஏதும் இருக்கவில்லை ஆனாலும் அவர்கள் தாங்கள் பெற்றுக் கொண்ட நன்மையை மற்றவர் களுடன் பகிர்ந்து கொண்டார்கள். எங்கள் வாழ்க்கையில் நாங்கள் தேவனருளும் மாட்சிமையான மன்னிப்பை பெற்றுக் கொண்டோம். எங்கள் கடன்களை (குற்றங்களை) அவர் தயவாய் மன்னித்துவிட்டார். இன்று நாங்கள் பணத்தினாலோ, உலக சொத்துக்களாலோ ஐசுவரியமற்றவர்களாக இரு க்கலாம் ஆனால் தேவனுடைய இரக்கத்தை தினமும் எம் வாழ்வில் தாரா ளாமாக பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆகவே, எங்களிடத்தில் உள்ள நன்மைகளை மற்றவர்களுக்கு தாராளமாக வழங்குவோம். “ஆகை யால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.” மற்றவர்கள் உங்களுக்கு எதிராக செய் யும் குற்றங்களை அவர்களுக்கு மன்னித்துவிடுங்கள். அதை மறுபடியும் நினையாதிருங்கள். சிலர், தேவன் தங்களோடு இருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்த அற்புதங்களையும் அடையாளங்களையும் நாடித் தேடு கின்றார்கள். ஆனால், மன்னிப்பின் மாட்சிமையைக் குறித்த எண்ண மும், செய்கையும் எங்களுக்குள்ளே உண்டாயிருந்தால், உன்னதத்த திலே வாசம் செய்யும் தேவனாகிய கர்த்தர் எங்களோடு இருக்கின்றார் என்பதற்கு அதுவே பெரிதான அடையாளமாக இருக்கின்றது.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, உம்முடைய பிள்ளை யாகிய நானும் உம்மைப் போல இரக்கத்திலே செல்வந்தனாக இருப்ப தன் மேன்மையை உணரும்படிக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப் 3:1-7