தியானம் (வைகாசி 28, 2020)
உன்னதமானவரின் பிள்ளைகள்
ஏசாயா 43:25
உன் பாவங்களை நினை யாமலும் இருப்பேன்
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த ஐசுவரியமுள்ள மனிதன், தன்னிடத்திலே கடன்பட்டு அதை குறித்த தவணையில் செலுத்த முடியாதிருந்த சில குடியானவர்களின் கடனை முழுமையாக அவர்களுக்கு மன்னித்து விட்டான். வருடங்கள் கடந்த பின்பும், தான் மன்னித்துவிட்ட கடன் எவ்வளவு என்றும், கடனாளிகள் யார் என்றும் அவ்வப்போது கூறிக் கொள்வான். குடியானவர்களின் கட னை மன்னித்தது பாரட்டத்தக்க விட யம் ஆனால் அவற்றைக் குறித்து திரும்பத் திரும்ப பேசிக் கொள்வ தினால் தன்னைத் தான் மேன்மைப் படுத்துவதோடு, மற்றவர்களின் பழைய குறைகளை புதுப்பித்து கொண்டிருந்தான். அந்த மனிதன் ஐசுவரியம் நிறைந்தவனாய் இருந்தும் குடியானவர்களின் கடனை இன்னமுமாய் மறந்து போகவில்லை. இந்த சம்பவத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;. அவ்விதமாக “அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெ ல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்த்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது.” என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். எங்கள் பழைய பாவங்களைக் குறித்து அவர் மறுபடியும் நினைப்பதில்லை. ஏனெனில் அவர் இரக்கத்தில் ஐசு வரியமுள்ள தேவன். எனவே பரம பிதாவுக்கு பிள்ளைகளாகும்படி அழைக்கப்பட்ட நாங்கள் மற்றவர்களின் குற்றங்களை மன்னித்து மறந்துவிட பழகிக் கொள்ள வேண்டும். மேலே கூறப்பட்ட சம்பவ த்திலுள்ள ஐசுவரியவான், தன் பெயருக்கு மேன்மை உண்டாக வேண் டும் என்பதால் மற்றவர்களுடைய கடன்களை மன்னித்துவிட்டான். தான் உதாரத்துவமுள்ள மனு~ன் என்று தன்னுடைய செயலைக் குறித்து விளம்பரப்படுத்துவதுடன், மற்றவர்களின் பழைய வாழ்க்கையின் குறை களை புதுப்பிக்கின்றவனாகவே வாழ்ந்து வந்தான். எங்கள் மீறுதல் களை மன் னித்து அதை நினையாமல் எங்களுக்கு மறுபடியும், இரக்கம் காண்பிப்பது எங்கள் பரலோக தந்தையின் சுபாவம். அவருடைய பிள்ளைகளாகிய நாங்களும், நம்முடைய தேவனைப் போல் தெய்வீக சுபாவத்திலே நாளுக்கு நாள் வளர்ந்து பெருக வேண்டும்.
ஜெபம்:
அப்பா பிதாவே என்று உம்மை அழைக்க அதிகாரம் தந்த தேவனே, உம்முடைய பிள்ளையாகிய நான், மற்றவர்களுடைய தப்பித ங்களை மன்னித்து மறந்து விடும்படி நல்ல இருதயத்தை தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - லூக்கா 6:32-36