புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 27, 2020)

வைராக்கியம் பாராட்டுதல்

அப்போஸ்தலர் 9:6

ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிரு க்கிறீர் என்றான்.


சவுல் என்னும் மனிதன் (பின்பு பவுல் என்று அழைக்கப்பட்டவர்), கர்த்தருடைய சீ~ரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படிக்கு பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய் அனுமதி பெற்று, பிரயாணமாய்ப் போய், தமஸ்கு வுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவ னைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். அப் பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னு டனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன்: ஆண்ட வரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக் குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். ஆண்டவருடைய சித்தப்படி, பவுல் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன என்று அறிவிப்பதற்கு அனனியா என்னும் ஊழியன் கர்;த்தரால் அனுப்பப்பட்டார். சற்று சிந்தித்துப் பாருங்கள்! யூத மதத் தலைவர்களால் அங்கீகாரம் பெற்ற மனிதன், தன் மதத்தை குறித்து வைராக்கியமுள்ளவர், கல்வி அறிவில் சிறந்தவர், சட்டநூலின்படி குற்றம் செய்யாதவர், சமுக அந்தஸ்திலே உயர்ந்தவர், இவை யாவும் இருந்தும் அவர் தன்னைக் குறித்த தேவ சித்தம் என்ன என்பதை அறிய முடியாதவராகவும், தேவனுடைய சித்தத்திற்கு தங்களை ஒப்புக் கொடுத்தவர்களை துன் புறுத்துகின்றவ ராகவும் இருந்தார். சற்று எங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்ப்போம். எங்களுடைய தகைமைகள் என்ன? வருடங்கள் கடந்து செல்லும் போது, எங்களுடைய வாழ்வில் இருக்கும் மத வைராக்கியத்தை அல்லது எங் கள் தகைமைகளை தேவ பக்தி என்று எண்ணிக் கொண்டிருக்கலாம். நாங்கள் எப்போதும் தேவனுடைய சித்தம் என்ன என்பதை அறிந்து அதை நிறைவேற்றுகின்றவர்களாக வாழ வேண்டும். தேவனுடைய பாதத்திலே தனித்திருந்து விண்ணப்பம் பண்ணி ஊக்கத்தோடு அவரு டைய சித்தம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இயேசுவே, இப்போது என் வாழ்வில் நான் என்ன செய்ய வேண்டும் என நீர் சித் தமாயிருக்கின்றீர் என்று அவரிடம் கேட்கும் போது, தேவ ஆவியான வர் தாமே நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு கற்றுத் தருவார்.

ஜெபம்:

அநாதி தீர்மானத்தின்படி அழைத்த தேவனே, என் வாழ்வில் உம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதை குறித்து எப்போதும் விழிப்பு ள்ளவனாக இருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 சாமு 15:22-23