புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 26, 2020)

என் தவிப்பை யார் அறிவார்

சங்கீதம் 38:9

ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை.


என்னுடைய நிலையை யார்தான் புரிந்து கொள்வார்கள்? விளக்கிக் கூறுவதற்கு வார்த்தையோ பெலனோ என்னிடம் இல்லை என்று ஒரு தாயானவள் கூறிக் கொண்டாள். இப்படிப்பட்ட சூழ்நிலைகள் மனித ர்களுடைய வாழ்வில் ஏற்படுவதுண்டு. நான் காரியத்தை விளக்கிக் கூறினால் என்னை நியாந்தீர்த்து தள்ளிவிடுவார்கள். காரியத்தை விளக்கிக் கூறாவிட்டால், வஞ்சனை உன் இருதயத்தில் இருக்கின்றது என்று சொல்வார்கள். சில வேளைகளிலே, கையளவு எண்ணிக்கையுள்ள மனித ர்கள் ஒரளவிற்கு என்னை புரிந்து கொள்ளலாம் ஆனால் அதற்கும் ஒரு வரையறை உண்டு. அதாவது, நான் எந்த குற்றமும் செய்யாத பரிசுத்தன் என்பது அல்ல, ஆனால் என் நிலையை யாராவது புரிந்து கொண்டு, இந்த இக்கட்டில் இருந்து என்னை விடு விக்க வழிகாட்ட யாரும் இல்லையா என்பது சிலரின் ஆதங்கம். தாவீது என்னும் தேவ பக்தனுக்கும் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டது. அவனும் “என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது. என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை. நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன். என் உள்ளம் குழம்பி அலைகிறது. என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று. என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள். என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண் ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடா னவைகளைப்பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்” என்று தன் நிலையை தேவனிடம் கூறினார். எனினும் தன் ஏக்கமெல் லாம் தேவனுக்கு முன்பாக இருக்கிறது என்பதையும் தன் தவிப்பு தேவ னுக்கு மறைவாயிருக்கவில்லை என்ற உண்மையையும் அறிந்திருந்தார். பிரியமானவர்களே, உங்களுடைய தனிப்பிட்ட நிலை பிரத்தியேகமான தாக இருக்கலாம். ஆனால் கர்த்தர் மாறாதவராயிருக்கின்றார். நீதிமா ன்கள் கூப்பிடும் போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.

ஜெபம்:

உள்ளந்திரியங்களை ஆராய்ந்து அறிகின்ற தேவனே, என் நிலையை வாழ்வின் நிலைமையை நீர் நன்றாய் அறிந்திருக்கின்றீர். உமக்காக காத்திருக்கின்றேன், நீர் என்னை விடுவித்து காத்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:17-19