புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 25, 2020)

நான் தனித்து விடப்பட்டேனா?

எபேசியர் 5:8

முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள் இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்ளுங்கள்.


என்னுடைய வீட்டிலே நான் மட்டுமே இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கின்றேன். தற்சமயம், மற்றவர்கள் யாவரும் இதற்கு எதிர்த்து நிற்பதினால், வீட்டிலே அநாவசியமற்ற தர்க்கங்கள் நடைபெறுகின்றது என்று ஒரு மனிதன் கூறிக் கொண் டான். சில குடும்பங்களிலே கணவன் மட்டும் இரட்சிப்படைந்திருக்க லாம், வேறு சில குடும்பங்களில் மனைவி மாத்திரம் இரட்சிப்படைந்திருக்கலாம். சில இடங்களிலே, பிள்ளைகள் மட்டும் இரட்சிப்படைந்திருக்கலாம். இந்த சூழ் நிலைகளில் குடும்பங்களிலே கருத்து முரண்பாடுகளுக்கும், தர்க்கங்களுக்கும் இடமுண்டாகலாம். முதலாவதாக, விலைமதிக்கமுடியாத மீட்பராகிய இயேசுவின் பரிசுத்த இரத்தத்தினாலே, பாவமறக்கழுவப்பட்டு, நீதிமானாக மாற்றப்பட்டிருக்கின்றேன் என்பதை இர ட்சிப்படைந்த சகோதரனாவது அல்லது சகோதரியாவது திட்டமாக அறிந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக, எந்த சந்தர்ப்பத்திலும், எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக் கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருப்பதால், அவைக ளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோ தமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்க ளாயிருக்கிறோம் என்ற சத்தியத்தை நீதிமான்களாகிய நாங்கள் கைக்கொள்ள வேண்டும். சரீரத்திலே நிந்தனைகளையும் பாடுகளையும் சகிக்க நேர்ந்தாலும், அமைதலுள்ள ஆவியினாலும், தேவனுடைய வார் த்தையைத் தியானிப்பதினாலும், ஜெப வேண்டுதலினாலும், தன்னு டைய இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்ப ண்ணுவதாலும் தன் ஆன்மீக மகிழ்ச்சியை காத்துக் கொள்வான். முற் காலத்திலே அந்தகார கிரியைகளுக்கு உட்பட்டிருக்கும் போது, மாம்ச இச்சையின்படி தர்க் கங்களை செய் தோம், இப்போதோ ஒளியின் பிள்ளைகளாக நாம் இரு ப்பதால், தேவனை இன்றும் அறியாதவர்கள் போல மாம்சத்தின் இச்சை களின்படி போராடக் கூடாது. இப்படியான சூழ்நிலைகளிலே எங்கள் இருதயத்தை துன்மார்க்கத்தின் களமாக மாற்றிக் கொள்ளாமல், நீதி யின் கூடாரமாக காத்துக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

என் நிலையை நன்றாக அறிந்த தேவனே, நான் மாம்சத்திலே துர்கிரியைகளை எதிர்த்துப் போராடாமல், தேவ ஆவியின் வல்லமையினால் ஞானமாக நடந்து கொள்ளும் உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 10:4-5