புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 24, 2020)

நீதிமான்களின் கூடாரம்

சங்கீதம் 118:15

நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு; கர் த்தரின் வலதுகரம் பராக் கிரமஞ்செய்யும்


நீதியைப் பின்பற்றுகின்ற உத்தம மார்க்கத்தாரை கர்த்தர் நேசிக்கி ன்றார்;. உத்தம மார்க்கத்தார் தங்கும் வீடடிலே, சொந்த புரு~னைக் குறித்த கனம் மனைவிக்கு இருக்கும். தன் மனைவியை குறித்த அன்பு புருஷனிடத்தில் இருக்கும். பெற்றோருக்கு கீழ்ப்படியும் கீழ்ப்படிவு பிள்ளைகளிடத்தில் இருக்கும். தங்கள் பிள்ளைகள் பெலனற்றுப் போகா தபடி, அவர்களை தேவ வழியில் நட த்தும் போதனை பெற்றோரிடம் இருக் கும். தங்கள் தாய் தந்தையரை விசா ரிக்கும் அன்பு, பிள்ளைகளிடத்தில் இரு க்கும். உத்தம வழியிலே நடக்கின்ற மனுஷன், எப்போதும் கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று சோதித் துப் பார்க்கின்றான். கனியற்ற அந்த காரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவன் அவைகளை கடிந்துகொள் வான். அங்கே துன்மார்க்கருடைய ஆலோசனைக்கும், பாவிகளுடைய வழிகளுக்கும் இடமில்லை. உத்தம மார்க்கத்தார் தங்குமிடத்தில் பரியா சக் காரருக்கு இடமில்லை. அவனுடைய வீட்டிலே கூக்குரல்களுக்கும் சண்டைகளுக்கும் வாக்குவாதங்களுக்கும் இடமில்லை. அவன் தேவ னைத் தன் தாபரமாக கொண்டிருப்பதால், எந்த சூழ்நிலையிலும் அவனு டைய வீட்டிலே துதியின் சத்தம் கேட்கும். இரட்சிப்பின் கெம்பீர சத்தம் இருக்கும். அவன் கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவனா கையால் அவன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான். (சங்கீதம் 128). இது நீதிமானுடைய கூடாரம்! அவன் ஆவிக்குரிய வைகளையே சிந்தி த்துக் கொண்டிருப்பான். துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவரு ப்பானது. அவர்கள் எப்போதும் தங்கள் மாம்ச இச்சையை நிறைவேற்ற மனதாயிருப்பார்கள். தங்கள் துன்மார்க்க உளையிலே அவர்களோடே கூட நீதிமான் விழாமலிருக்கிறதினாலே துன்மார்க்கர் ஆச்சரியப்பட்டு, நீதிமானை தூஷிpப்பார்;கள். துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது. அங்கே காமவிகாரத்திற்கும், துர்இச்சைகளுக்கும், மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனை செய்வதற்கு இடமுண்டு. (1 பேதுரு 4:3). இது துன் மார்க்கர் தங்கும் ஆகாமியக் கூடாரம். பிரியமான சகோதர சகோதரி களே, எங்கள் வீடுகளிலே இரட்சிப்பின் ஆனந்த சந்தோ~த்தின் தொனி முழங்கட்டும். தெய்வீக சுபாவங்கள் எங்கள் வாழ்க்கையின் வழியாக வெளியாகட்டும்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, துன்மார்க்கரின் வழிகளை தெரிந்து கொள்ளாமல், நீர் எங்களுக்கு காட்டும் ஜீவ வழியிலே நான் முன்னேறிச் செல்ல எனக்கு பெலன் ஈந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:9-19