புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 22, 2020)

விசுவாச மார்க்கத்தாரின் வாழ்வு

1 பேதுரு 3:12

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது.


அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயி ருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். இவர்கள் விசுவாச மார்க்க த்தார், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் கள். தேவ பக்தியாய் நடக்கின்ற நீதிமான்களுக்கு ஏற்படும் துன்பம் அவர்களுடைய அநீதியினால் உண்டாவதில்லை. அவை நீதியின் நிமி த்தம் உண்டாகும் உபத்திரவங்கள். ஆதி அப்போஸ்தலர்களின் நாட்களிலே, தேவ ஊழியராகிய பேதுரு விசுவாசமார்க்க த்தாருக்கு கூறியதாவது: “கிறிஸ்துவுக் கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிpக்கிறவர்கள் உங்களை அக்கிரம க்காரரென்று உங்களுக்கு விரோதமா ய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட் கப்படும்படிக்கு நல் மனச்சாட்சியுடைய வர்களாயிருங்கள். சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காம விகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனை யைச் செய்துவந்தோம். அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோ டேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங் களைத் தூஷிக்கிறார்கள்.” இயேசு கிறிஸ்து நமக்காக பாடுகளை சகித் தார், எனவே அவருடைய சுவிசேஷம் எங்கள் வாழ்க்கை வழியாக மற் றவர்களுக்கு பிரஸ்தாபம் பண்ணப்படும்படிக்கு, நாங்களும் கிறிஸ்து வின் சிந்தையை ஆயுதமாகத் தரித்தவர்களாக காணப்பட வேண்டும்;. எனவே எங்கள் வாழ்க்கையில் பாடுகள் ஏற்படும் போது, கலகங்களை ஏற்படுத்தாமல், அவற்றை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தீமை செய்ததினால் பாடுகள் ஏற்பட்டிருந்தால், எங்கள் குற்றத்தை ஏற்றுக் கொண்டு மனந்திரும்பி சிலுவையின் நிழலிற்கு திரும்ப வேண்டும். நன்மை செய்வதினால் பாடுகள் ஏற்பட்டிருந்தால், இப்படிப்பட்ட பாடு கள் எங்களுக்கு முன் கடந்து சென்றிருக்கும் நீதி மான்களின் வாழ்க் கையிலும் ஏற்பட்டது. எனவே அவை யாவற்றின் மத்தியிலும், அவர்கள் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி வெற்றி சிறந்தார்கள் என்பதை உணர்ந்தவர்களாக, கிறிஸ்து இயேசுவின் சாயல் எங்களில் வெளிப்படும்படிக்கு பொறுமையோடே காத்திருப்போம். இப்படிப்பட்ட வாழ்க்கை நீதிமானுக்குரியது. கர்த்தருடைய கண்கள் இப்படிப்பட்டவ ர்கள் மேல் நோக்கமாயிருக்கின்றது.

ஜெபம்:

பரலோக தேவனே, நீதிபரராகிய இயேசு கிறிஸ்து எங்களுக்காக பாடுகளை சகித்தது போல நாங்களும் நன்மை செய்து பாடு அனுபவிக் கின்ற மனநிலையுடையவர்களாகும்படி வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 3:12