புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 21, 2020)

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு

மத்தேயு 25:46

அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்


ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு. வானத்தின் கீழிருக்கிற ஒவ் வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. பிறக்க ஒரு காலமு ண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு. இப்படியாக, சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே ஒரேவிதமா ய்ச் சம்பவிக்கின்றது. “அவனும் இந்த உலகிலே பிறந்தான், நானும் பிறந் தேன், அவனும் வாழ்கின்றான், நானும் வாழ்கின்றேன், அவனும் இந்த உலக த்தைவிட்டு மரித்துப் போவான், நானும் அப்படியே மரித்துப் போவேன்” என்று தான் தாபரிக்கும் ஊரை அறியாத மனிதன் கூறிக் கொள்வான். “அவனை பாருங்கள், எவ்வளவு, நன்மைகள் செய்தான், நல் வழியிலே வாழ்ந்தான், இறுதியில் என்ன த்தைக் கண்டான், இந்த உலகிலே என்னத்தை அனுபவித்தான், அவ னுக்கு இப்படியாக சம்பவித்துவிட்டதே” என்றும் தாங்கள் வாழ்கின்ற பிரகாரமாக கண் போன போக்கில் வாழ்வோம் என்று மனிதர்களு டைய இருதயம் அகங்காரமாக, மேட்டிமையானவைகளை பேசுவதுண்டு. பாவமறியாத கருணை நிறைந்த எங்கள் மீட்பராகிய இயேசு சிலு வையிலே தொங்கிய போது, அவரைப் பார்த்து: மற்றவர்களை இரட் சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை. இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங் கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம் என்று இயேசுவை நிந்தித்தார்கள். அப்படி நிந்தித்தவர்கள் கர்த்தரை அறியாதவர்கள், இவர்கள், தங்கள் மனம் போன போக்கில் வாழ்பவர்கள். தாங்கள் நினைத்தபடி தேவன் காரியங்களை நடப்பிக்க வேண்டும் என்ற சிந்தை யுடையவர்கள். துன்மார்க்கன், சன்மார்க்கன், நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடில்லாமல், யாவரும் இந்த உலகத்தைவிட்டு கடந்து செல்ல வேண்டும் என்பது உண்மை. ஆனால் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு. அதாவது நித்திய ஜீவனை சுதந்தரிக்க, அல்லது நித்திய அக்கினியில் பங்கடைய ஒரு நாள் உண்டு. அந்நாளிலே பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றிய நீதிமான்கள் நித்திய ஜீவனு க்குள் கடந்து செல்வார்கள்.

ஜெபம்:

பிதாவாகிய தேவனே, உம்முடைய குமாரனுடைய விலை மதிக்க முடியாத இரத்தத்தினாலே எங்கள் பாவங்களை கழுவி, நீதிமான் களாக்கினீர். இந்தப் பாக்கியத்தை முடிவு பரியந்தம் காத்துக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 3:1-11