புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 19, 2020)

மார்க்கம் தப்பி நடப்போர்...

யாக்கோபு 5:20

தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்


தன்னுடைய இறுதி நாட்கள் அண்மித்திருக்கின்றது என்று அறிந்த தக ப்பனார், தன் மூத்த மகனை அழைத்து, நான் கடந்து சென்ற பின்பு, உன் தம்பியை நீ விசாரித்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். மூத்தவனோ, தன் தம்பியானவன், தன் இஷ்டப்படி ததாக நண்பர்களோடு சேர்ந்து பாடசாலை நாட்களை விரையப்படுத்தினான் என்றும், ஆனால் நீங்களோ தம்பியைப் குறித்தே கரிசனையுள்ளவராக இருக்கி ன்றீர்கள் என்று தன் தந்தையிடம் கூறினான். மகனே, உன் வாழ்வை குறித்த மகிழ்ச்சி என் இருதயத்திற்கு எப்போ தும் ஆறுதல். உன் தம்பி, தன் வாழ்வை கெடுத்துக் கொண்டது உண்மை. ஆனா லும் அவனும் என்னுடைய மகனே. உன்னுடைய சகோதரன் கூட. அதனால், அவன் ஒரு நாள் உணர்வடைந்து கொள் ளும் போது, “என்னுடைய அண்ணன் எப்படியும் என்னை புறக்கணிக்காமல் ஏற்றுக் கொள்வான்” என்ற நம்பிக்கை, உன் தம்பியின் உள்ளத்தில் இருக்கும்படிக்கு, ஒருவழியை ஏற்படுத்தி வைத்துக் கொள். நீ மட்டும் மல்ல அவனும் நித்திய வாழ்வை அடைந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். ஆம் பிரியமானவர்களே, நானும் என் வீட்டாரும் கர்த்தரையே சேவிப்போம் என்பதன் பொருளை அறிந்து கொள்ளவேண்டும். முதலாவதாக, நான் என் ஆத்துமாவை எந்த வித த்திலும் கெடுத்து கொள்ளக் கூடாது. இரண்டாவதாக, யாவரும் மனந் திரும்பி தேவனிடத்திற்கு திரும்ப வேண்டும் என்கின்ற பாரம் மனதில் உருவாக வேண்டும். “என் வாழ்வு ஆரோக்கியமாக உள்ளது. என் குடும்பம் பக்தியாயுள்ளது, நான் தேவனோடு இருக்கின்றேன்” என்று நாங்கள் பெருமை அடைய முடியாது. கண் கண்ட சகோதரனை அன்பு செய்யாதவன், கண் காணாத தேவனை எப்படி சேவிக்க முடியும்? ஒரு சகோதரன் தன் தீர்மானத்தின்படி தன் வாழ்வை கெடுத்துக் கொள்ளும் போது, அவனுடைய தவறான வழிகளுக்கு நாங்கள் உடன்பட்டவர்கள் அல்ல. ஆனால் நாங்கள் அவனைக் குறித்து சாபமான வார்த்தைக ளைப் பேசாமல், அவன் மோசம் போகாமல், சத்திய மார்க்கத்திற்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் தேவனை நோக்கி விண்ண ப்பம் பண்ண வேண்டும். ஒருவரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவ னை அடைய வேண்டும் என்பதே தேவனுடைய அநாதி தீர்மானம்.

ஜெபம்:

என்னை தேடி வந்த தேவனே, சத்திய மார்க்கத்தை விட்டு, உல கத்தின் வழியில் நடப்போரை உம்முடைய சத்திய வழிக்குள் திருப்ப வேண்டும் என்ற உணர்வுள்ள இருதயத்தை எனக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோசுவா 24:15