புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 17, 2020)

உணர்வுள்ள ஜீவியம்

லூக்கா 18:8

ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண் பாரோ என்றார்.


தன்னுடைய பிள்ளைகளை நேசிக்கும் தகப்பன் ஒருவன், பிள்ளைகளின் நலனுக்காக பல தியாகங்கள் மத்தியிலே கடுமையாக உழைத்து வந் தான். தன் பிள்ளைகள், தமது வாழ்க்கையின் கருப்பொருளை உணர் ந்து, பொறுப்புள்ளவர்களாக செயற்பட வேண்டும் என்பதையே தகப்ப னார் விரும்பினார். ஆனால் பிள்ளைகளோ, தந்தையாருடைய நன்மை களை பெற்றுக் கொண்டு, அடுத்த வார இறுதியில் எங்கே செல்லலாம்? வேடிக்கையாக (கரn) என்ன செய்ய லாம்? வீட்டிலே என்ன விளையாட்டுக் களை விளையாடலாம்? வசந்த கால விடு முறையில் எங்கே உல்லாசப் பயணம் செல்லப் போகின்றோம் என்பதைப் பற்றி பேசுவதிலும், திட்டம் போடுவ திலும், அவைகளை செய்வதிலுமே அதிக நேரத்தை செலவிட்டார்கள். இத னால் மனவேதனை அடைந்த தகப்பனார், சில மாதங்களுக்கு வெளியே நடக்கும் நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை, உங்கள் அறைகளிலே இருந்து வாழ்க்கையைப் பற்றி சிந்தியுங்கள் என்று பிள்ளைகளை கண்டித்தார். ஆனால், அறைவீட்டுக்குள் இருக்கும் பிள்ளைகளோ, தங்கள் வாழ்க் கையைப் பற்றி சிந்திப்பதற்கு பதிலாக, இன்ரநெற் ஊடகங்களிலே தங் கள் நேரத்தை செலவிட்டார்கள். பிரியமானவர்களே, இது எங்கள் பிள் ளைகளை பற்றியதல்ல! இது எங்களைப் பற்றியது. எங்கள் பரமபிதா எங்களுக்கு பெரிதான அழைப்பை தந்திருக்கின்றார். எனவே வாழ்வின் கருப்பொருளை உணர்ந்தவர்களாக, அந்த அழைப்பிற்கு பாத்திரராக நாங்கள் நடந்து கொள்ள வேண்டும். எங்கள் பரமபிதா, எங்களை தண் டித்து கண்டிக்கும் போது (சிட்சிக்கும் போது), நாங்கள் உணர்வடைய வேண்டும். கல்வியை கடுமையாக கற்று, கௌரவமான வேலை செய்து, கை நிறைய சம்பாதித்து, வயிறாற உண்டு, உல்லாசமாக வாழ்ந்து, மிகு தியாக இருக்கும் சொற்ப நேரத்தில் மட்டும் தேவனை குறித்து சிந்தி ப்பது கிறிஸ்த வாழ்க்கை ஆகுமா? இந்த உலகிலே அழிந்து கொண் டிருக்கும் பல ஆத்துமாக்களின் மத்தியிலே, அழியாத வாழ்வை பெற் றுக் கொள்ளும்படி மகத்துவமாக அழைப்பை பெற்ற நாம் அசட்டை யாக இருக்கக் கூடாது. கடந்த சில நாட்களாக தியானத்திலே குறிப்பி ட்டப்பட்டதைப் போல, எங்கள் வாழ்க்கையின் எல்லாக் கட்டத்திலும், விசு வாசத்தை விட்டு விலகாமல் உணர்வுள்ள வாழ்க்கை வாழ வேண்டும். இயேசு மறுபடியும் வரும் போது, அவர் முன்னிலையிலே ஆயத்தமு ள்ளவர்களாய் இருக்கும்படிக்கு விழிப்புள்ளவர்களாக வாழ்வோம்.

ஜெபம்:

நித்திய வாழ்வு தரும் தேவனே, இந்த பூவுலகிலே வாழும் நாட்களிலே, காலங்களை உணர்ந்து, உம்முடைய வார்த்தையின் வெளிச் சத்தில் வாழும்படி என்னை உணர்வுள்ளவனா(ளா)க்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:6