புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 16, 2020)

ஏழையின் கூப்பிடுதல்…

மாற்கு 10:52

இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்


தங்க வீடின்றி அல்லது ஏதோ காரணத்தினால் வீட்டில் இருந்து துரத்தி விடப்பட்டவர்கள், தெரு ஓரமாக தங்குவதுண்டு. மேலும் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்கும் மனிதர்களையும் பல இடங்களிலே காண் கின்றோம். சிலர் இவர்கள் யாவரையும் ஒரே பிரிவுக்குள் வகைப்படு த்திக் கொள்வார்கள். வேறு சிலர், இவர்களின் நிலையைக் குறித்து பலவிதமாக பேசிக் கொள்கின்றார்கள். இன்றை நாட்களிலே ஆங்காங்கே அவ ர்களை கேலி செய்து துன்புறுத்துபவர் களும் இருக்கின்றார்கள். இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, எரிகோ என்னும் பட்டணத்திற்கு வந் தபோது, திரளான ஜனங்கள் அவரை பின்பற்றினார்கள். அந்த வேளையிலே பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரெ ன்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத்தொடங்கினான். அநேகர் அவனை அதட்டி பேசாதி ருக்கச் செய்யும்படி எத்தனித்தார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். அந்த ஏழையின் குரலைக் கர்த்தர் கேட்டார். அவன் சரீரத்திலே குருனடாக இருந்தபோதும், அவனுடைய விசுவாசக் மனக்கண்கள் வெளிச்சமாக இருந்தது. இயேசு யார் என்பதை அறிந்த அவனின் விசுவாசத்தை, அவனை அதட்டுகின்றவர்களினால் அடக்கி வைக்க முடியவில்லை. அந்த திராளான ஜனங்கள் மத்தியிலும் இயேசு நின்று, அவனை அழைத்து வரச் சொன்னார். இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித் தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, இயேசுவுக்குப் பின் சென்றான். பெரியவர்கள், உயர்ந்தவர்கள், பிரபல்யமானவர்கள் என்று திரளானவர்கள் இன்றும் இயேசுவை பின்பற்றி செல்கின்றார்கள். ஆனாலும் இயேசு சிறுமைப்பட்டவர்களின் வேண்டுதலை கேட்கின்றார் இந்த உலகத்தினால் அற்பமாக எண்ணப்படும் மனிதர்களின் கூப்பி டுதலுக்குச் செவி கொடுக்கின்றார். எனவே உங்கள் உள்ளான மனித னிலே இருக்கும் விசுவாசத்தை தளரவிடாதிருங்கள். பொறுமையை இழந்து விடாமல், தேவனுக்கு காத்திருங்கள்.

ஜெபம்:

உம்மை நோக்கி கூப்பிடும் ஒருவரையும் தள்ளாத தேவனே, என் சிறுமையிலும் உம்மைக் குறித்த விசுவாசத்தில் தளர்ந்து போய் விடாமல், உம்முடைய வேளைக்காக காத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:6-7