புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 14, 2020)

உத்தம மார்க்கத்தாரின் வாழ்வு

யோபு 13:15

அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்;.


தன் இளம் வயதிலே, தன் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகளினால் ஒரு இளைஞன்: “தேவன் என்றொருவர் இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா” என்று தன் மனதிலே சிந்தித்துக் கொள்வான். அந்த இளை ஞன் மட்டுமல்ல இன்று பல சன்மார்க்கரும், துன்மார்க்கர்களும், ஏன், தேவ அழைப்பைப் பெற்ற சில பிள்ளைகளும், தங்கள் அறியாமையி னாலே இப்படியாக கூறிக் கொள்வ தைக் கேட்டிருக்கின்றோம். பாபிலோ னின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எரு சலேமைக் கைப்பற்றியபோது, ராஜா வின் அரண்மனையில் சேவிக்கத் திற மையுள்ள சில வாலிபரை கொண்டு வரு ம்படி கட்டளையிட்டான். அவர்களுக் குள் அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களும் அடங்குவார்கள். இந்த வாலிபர்கள், இளம் பிராயத் திலேயே தங்கள் குடும்பத்தையும், தங்கள் தேசத்தையும் விட்டு பிரி க்கப்பட்டு அந்நிய தேசத்திற்கு சிறைப்பட்டு போனார்கள். தங்களுக்கு இருந்த சுதந்திரத்தை இழந்து தாங்கள் அறியாத தேசத்திலே ராஜாவை சேவிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இவர்கள் ராஜாவின் தயவை பெற்றிருந்த நாட்களிலே, ராஜா ஒரு பெரிய சிலையை செய்து, அதை தாழவிழுந்து வணங்கும்படி கட்டளை கொடுத்தான். ஆனால் இந்த வாலிபர்கள் மூவரும், தங்கள் வாழ்வின் பின்னடைவினால் சோர்ந்து போகவில்லை. ஜீவனுள்ள தேவனிடத்திலே விசுவாசமாயிருந்தார்கள். தற்போது இருக்கும் ராஜ தயவையும் பொருட்படுத்தாது, நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்மு டைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள். இந்த இளைஞர்களது விசுவாசத்தின் கிரியையை சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். இன்று மனித ர்கள், தங்கள் விருப்பப்படி காரியங்கள் கைகூடாதவிடத்து தேவனை தூ~pக்கின்றார்கள். ஆனால் இந்த இளைஞர்கள் என்னதான் தங்கள் வாழ்;க்கையில் நடந்தாலும், நடக்காமல் விட்டாலும். யோபு என்ற பக்த னைப் போல தாங்கள் விசுவாசிக்கும் தேவன்மேல் பற்றுதலாயிருந்தார் கள். பிரியமானவர்களே, நாங்களும் அப்படிப்பட்ட விசுவாசித்திலே நாளுக்கு நாள் வளர வேண்டும்.

ஜெபம்:

உண்மையுள்ள தேவனே, என் வாழ்வில் நெருக்கங்கள் சூழ்ந்து கொள்ளும் போது, விசுவாசத்தைவிட்டு தளர்ந்து போகாமல், உம்மை அதிகதிகமாக பற்றிக் கொள்ளும் இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - தானியேல் 3:16-18