புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 13, 2020)

பூமியிலே வாழும் ஆயுசு நாட்கள்

எபிரெயர் 11:35

வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலை பெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்;


விசுவாசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஆபிரகாம் என்னும் மனிதன், நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசுநாட்கள் நூற்று எழுபத்தைந்து வரு~ம். பொது வாக எந்த மனிதனும், இந்த பூமியிலே பூரண ஆயுசை அடைய வேண்டும் என்றே விரும்புவார்கள். அத்தகைய வாழ்வை வாழ்ந்து கடந்து சென்றவர்களை ஆசீர்வதிக்க ப்பட்டவர்கள் என்று கூறிக் கொள்வா ர்கள். ஆனால், விசுவாசத்தின் போரா ட்டம் என்பது, வாழ்வின் கால எல்லை யை குறித்த விடயம் மட்டுமல்ல. ஆதி அப்போஸ்தலரின் நாட்களிலே, ஸ்தேவான் என்னும் பெயர் கொண்ட உதவி ஊழியக்காரன், விசுவாசத்தி னாலும் வல்லமையினாலும் நிறைந் தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாள ங்களையும் செய்தான். இளமையான வயதிலே யூதர்களின் ஆலோச னைச் சங்கத்திலே யூத மதத் தலைவர்களுக்கு முன்பாக நின்று கர்த் தராகிய இயேசுவை குறித்து திடநம்பிக்கையோடு பேசினான். யூத மதத் தலைவர்களோ, அவனை கல்லெறிந்து கொன்றார்கள். ஸ்தேவான் இரத்த சாட்சியாக மரிக்கும் தறுவாயிலும் “முழங்காற்படியிட்டு: ஆண் டவரே, இவர்கள் மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.” அவன் தன்னுடைய இளவயதிலும் தன் வாழ்வை ஒரு பொருட்டாக எண்ணாமல், மரணம் வரைக்கும் தன் விசுவாசத்தை கிரியையிலே காண்;பித்தான். இப்படியாக அநேகர்: விசுவாசத்தினாலே ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற் றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், ஸ்திரீகள் சாகக் கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடு தலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்;. கருப்பொருளாவது, விசுவாசத்தின் நல்ல போராட்டம் என்பது இந்த பூமியிலுள்ள ஆயுசின் நாட்களை குறித்ததல்ல. விசுவாசத்தின் நல்ல போராட்டமானது, பிதா வாகிய தேவனுடைய சித்தத்தை அவரவர் தங்கள் அழைப்பின்படி தங் களுக்கு ஒப்புவிக்கப்பட்டதை நிறைவேற்றி முடிப்பதாகும்.

ஜெபம்:

என்னை அழைத்த தேவனே, நான் எந்த காலத்திலும், எந்த வேளையிலும் உம்முடைய அழைப்பின் நோக்கத்தை நிறைவேற்றி முடிக்கும் எண்ணமுடையவனா(ளா)க வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:7-11