புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 11, 2020)

கிரியையுள்ள விசுவாசம்

எபிரெயர் 11:6

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்;.


யுத்த நாட்களிலே, ஒரு தேசத்திலே ஆங்காங்கே அம்பாவிதங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது, ஒரு கிராமத்திலே எளிமையான வாழ்க்கை நடத்தி வந்த குடும்பத்தினர் யாவரும் புற தேசத்திற்கு செல் லும்படிக்கான நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளும்படிக்கு, பட்டண த்திலுள்ள கடவுச் சீட்டு வழங்கும் காரியாலயத்திற்கு செல்ல வேண் டியதாக இருந்தது. போக்குவரத்து ஸ்தம்பிதமானதினால், பட்டணத்திற்கு செல்வதற்கு சில நாட்கள் பயணம் செய்ய வேண்டியதாயிருந்தது. பட்ட ணத்திற்கு செல்வதற்கோ, அல்லது காரி யாலத்திற்கு சென்று அலுவல்களை முடி ப்படிதைக் குறித்தோ, முன்பின் அனு பவமோ வசதியோ எதுவும் அக்குடு ம் பத்தினருக்கு இருக்கவில்லை. பல வரு டங்களாக அயலில் வசித்து வந்த அயல்வாசி, தான் பட்டணத்திற்கு போக வேண்டியிருப்பதாகவும், அக்குடும்பத்தினரை தன்னோடு இணை ந்து கொள்ளும்படியும் கூறினார். அந்த மனிதனுடைய பேச்சைக் குறித்த விசுவாசம் அக் குடும்பத்தினருக்கு இருந்தது. ஆனால் காரியம் வாய்க்க வேண்டுமானால் அவர்கள் அந்த மனிதனுடைய பேச்சுக்கு இணங்கி, அவரோடு செல்வதற்கு சம்மதிக்க வேண்டும். அப்படியாக அவர்கள் சம்மதித்து அந்த மனிதனோடு செல்லும் போது, அவர்கள் தங்கள் விசுவாசத்தை கிரியையிலே காண்பிக்கின்றார்கள். போகும் பயணம் இலகுவாக இருக்கப் போவதில்லை. பயங்கரங்களும் அசௌகரியங் களும் ஆங்காங்கே ஏற்படலாம். ஆனால் காரியம் வாய்க்க வேண்டும் என்றால், பின்னிட்டுத் திரும்பாமல், மிகுந்த கவனத்தோடு பயணத்தை தொடர வேண்டும். பிரியமானவர்களே, விசுவாசமில்லாமல் தேவனு க்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்;. (எபிரெயர் 11:6) கிரியையிலே காண்பிக்கப்படாத விசுவாசம் தன்னில் தானே செத்ததாயிருக்கும். (யாக்கோபு 4:17) இந்த நாட்களிலே விசுவாசத்தின் நல்ல போராட்ட த்தைக் குறித்து அதிகமாக தியானிப்போம். கர்த்தர் மறுபடியும்; வரும் போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்று கூறியிருக்கின் றார். மறுபடியும் வருவேன் என்று சொன்ன இயேசுவின் வார்த்தையை விசுவாசித்து, அவருடைய நாளுக்கு ஆயத்தமாகும்படி, பரம தேசத்தின் யாத்திரிகர்களாக கொஞ்சக் காலம் இந்த பூமியிலே வாழ்ந்து கொண் டிருக்கும் நாங்கள், மிகவும் விழிப்புடையவர்களாய், விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருந்து, எங்கள் விசுவாசத்தை எங்கள் கிரியைகளி னாலே உறுதிப்படுத்த வேண்டும்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, நாட்கள் பொல்லாதவைகளாக மாறிக் கொண்டிக்கும் உலகிலே விசுவாசத்தைவிட்டு பின்வாங்கிப் போகாமல் உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:12