புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 10, 2020)

கர்த்தரை நம்பி நன்மை செய்

எபிரெயர் 13:16

அன்றியும் நன்மைசெய் யவும், தானதர்மம்பண் ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின் மேல் தேவன் பிரியமா யிருக்கிறார்.


ஒரு தொழிற்சாலையிலே வேலை பார்த்து வந்த தொழிலாளி செய் யும் வேலையும், வேலை முறைமைகளும் அந்த தொழிற் சாலையின் அதிபருக்கு விரும்பப்படத்தக்கதாகவே இருந்தது. வேலைத்தளத்திலோ அல்லது அவன் வாழ்க்கையிலோ சவால் நிறைந்த நாட்களை கடக்க வேண்டியிருந்தாலும், தொழிற்சாலை அதிபரிடம் இருக்கும், அந்த தொழிலாளியைக் குறித்த நன்மதிப்பு எப்போதும் அவனுக்கு ஆதர வாகவே இருந்து வந்தது. ஏனெனில் அவன் தன் நற்கிரியைகளால், அதிகா ரிகள் மத்தியிலே நன்மதிப்பை பெற் றுக் கொண்டான். இந்த சம்பவத்தோடு ஒப்பனையாக எங்கள் வாழ்க்கையின் கருப்பொருளை சற்று சிந்தித்துப் பார் ப்போம். பூமியும் அதின் நிறைவும் அதன் குடிகளும் கர்த்தருடையது. அவர் சர்வ வல்லமையுள்ள தேவன். அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற் கும். அவர் திறக்கக்கூடாதபடி அடைக் கின்றவரும், அடைக்கக்கூடாதபடி திறக்கின்றவருமாயிருக்கின்றார். இப் படிப்பட்ட தேவனாகிய கர்த்தரை நாங்கள் பிதாவாக கொண்டிருக்கி றோம். அப்படியானால், அவருக்கு பிரியமானதை மனதார செய்கின்ற வனை எப்படி குறைத்;து நாம் பேசமுடியும்? நாங்கள் சர்வ வல்லமையு ள்ளவருக்கு பிரியமான பிள்ளைகளாக இருந்தால் எப்படி தாழ்ச்சிய டைந்து போக முடியும்? கர்த்தரை நம்பினோர் ஒருபோதும் கைவிட ப்படுவதில்லை. நாங்கள் காண்கின்ற வானம், பூமி அதிலுள்ளவைக ளெல்லாம் அழிந்து போகும், ஆனால் கர்த்தரை நம்பியிருக்கின்றவன் நித்தியம் நித்தியமாக நிலைத்திருப்பான். “நான், என்னுடையது, என க்கு” என்று வாழ்பவன் சுயநலம் உடையவன். எதிர்காலத்தைக் குறித்த கவலை அவனை ஆட்கொள்வதால், அவன் தனக்கென்றே சேர்த்து வைக்கின்றான். அப்படிப்பட்ட மனநிலையோடு வாழாமல், கர்த்தரை நம்பி நன்மை செய்யுங்கள். நாளைக்கு என்னுடைய நிலை என்ன ஆவது, என்னுடைய பிள்ளைகளுடைய எதிர்காலம் எப்படியாய் முடியும் என்று கவலையடையாதிருங்கள். நாங்கள் பிதாவாகிய தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். எங்கள் தேவைகள் என்னவென்று அவர் அறிந்திருக்கின்றார். அவருக்கு பிரியமான வாழ்க்கை வாழ்பவனை அவர் நித்தமும் நடத்தி, மகா வறட்சியான காலங்களிலும்; அவன் ஆத் துமாவைத் திருப்த்தியாக்குவார்.

ஜெபம்:

பராக்கிரமமுள்ள தேவனே, என்னிடத்திலுள்ளவைகள் என்னை போஷிக்கும் என்ற எண்ணத்துடன் வாழாமல், உம்மை நம்பி, ஏழை எளியவர்களுக்கு நன்மை செய்யும் உணர்வை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 58:11