புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 09, 2020)

வாழ்க்கையில் புதிய காரியம் தோன்றும்

ஏசாயா 43:18

முந்தினவைகளை நினை க்கவேண்டாம்; பூர்வமா னவைகளைச் சிந்திக்க வேண்டாம்.


“இந்த வேலை இல்லையென்றால் இன்னுமொரு வேலை, இந்த கடை இல்லையென்றால் இன்னுமொரு கடை, இந்த பேரூந்தில் ஏறமுடியவில்லையென்றால் மற்றய பேரூந்தில் ஏறிக் கொள்வேன்” என்று ஒரு மனிதன் தன் வாழ்க்கையின் கொள்கைகளைக் கூறிக் கொண்டான். இதற்கொத்ததாகவே “கடலிலே எத்தனையோ மீன்கள் இருக்கின்றது” என்று பொருட்படும்படி பழமொழிகளை கூறிக்கொள்வார்கள். இப்படியாக கொள்கைகளிலே தவறு ஏதும் தெரியவில்லை என்று பலர் சொல்லிக் கொள்வார்கள். சிந்தப்பட்டு விரயமாக்கப்பட்ட பாலைக் குறித்து கவலையடையாதே (Don’t cry over spilt milk) அதாவது, கடந்ததையே நினை த்து கலங்கிக் கொண்டிராதே, உன் வாழ்வில் அடைக்கப்பட்ட ஒரு வாசலை நினைத்து உன் வாழ்க்கை முடிந்தது என்று எண்ணிவிடாதே என்பதெல்லாம் மனிதனுக்கு ஊக்கமளிக்கும் வசனங்கள். ஆனால், மேற்கூறிய சம்பவத்திலுள்ள மனிதனோ, தன் கொள்கைக்கு சரிவந் தால் மட்டும் நான் அதை ஏற்றுக் கொள்ளுவேன் அல்லது சரிவராது போனால் இன்னுமொன்றை எடுத்துக் கொள்வேன் என்று தன் அகங் காரத்தில் அதை கூறிக் கொண்டான். எல்லா மனிதர்களுடைய வாழ்வி லும் ஏதோ ஒரு கட்டத்தில் சவால்களும் பின்னடைவுகளும் ஏற்படுவது ண்டு. எடுத்துக்காட்டாக, வேலைத் தளத்தில் ஏற்பட்ட கருத்து முரண் பாட்டினால் நான் வேலையை இழந்து போய்விட்டேன். அதை நினை த்தே துக்கப்பட்டுக் கொண்டிருப்பதில் எனக்கோ மற்றவர்களுக்கோ பெரும் பலனில்லை. நான் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். இன்னுமொரு வேலையை பெற்றுக் கொள்ள பிரயாசப்பட வேண்டும். ஆனாலும், விட்டுவந்த வேலையில், நடந்த சம்பவத்தில், நான் கற்றுக் கொண்ட பாடம் என்ன? அந்த பாடமானது என்னில் நல்ல மாற்றங்களை உண்டாக்க வேண்டும். மாறாக “நான் செய்து காட்டு வேன்” என்ற மனநிலையையுடையவனாக மாறிவிடக்கூடாது. எல்லா சூழ்நிலைகளிலும் என்னுடைய மனம் மறுரூபமாக வேண்டும். கர்த்தரா கிய இயேசுவின் சாயலுக்கு ஒத்த வளர்ச்சி நாளுக்கு நாள் என்னில் பெருக வேண்டும். வனாந்தரத்திலே வழியையும் அவாந்தர வெளியிலே ஆறுகளையும் உண்டாக்குகின்ற தேவன், எனக்குள்ளும் புதிய காரிய ங்களைச் செய்வார் என்ற நம்பிக்கையுடன், அவர் சமுகத்திலே எங்க ளைத் தாழ்த்தக்கடவோம்.

ஜெபம்:

என் பரிசுத்தரும், சிருஷ்டிகரும் என் ராஜாவுமாகிய கர்த்தாவே, வாழ்க்கையில் ஏற்பட்ட கடந்த கால கசப்பான அனுபவத்தினால் என் இருதயம் கடினப்பட்டுப் போகாதபடிக்கு காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:1-5