புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 08, 2020)

நாளைய தினத்தை குறித்த திட்டம்

எரேமியா 9:24

மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியை யும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக் கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்;


நாளைய நிலையை அறிந்தவன் யார்? சிலர் தங்களது மிகையான ஐசு வரியத்தினால், நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டுகி ன்றார்கள். இன்னுமொரு சாரார், வாழ்க்கையின் பழுவினால் நாளைய தினத்தைக் குறித்த நம்பிக்கையற்றவர்களாக கவலையடைகின்றார்கள். இவ்வாறாக இந்த உலக ஐசுவரியத்தின் அளவுகோலானது, மிகை யாய் பெற்றவனையும், குறைவாய் பெற்றவனையும் நிலை தவறச் செய்கின்றது. (நீதிமொழிகள் 27:1, மத் தேயு 6:27). ஐசுவரியவான் தன் ஐசு வரியத்தைக்குறித்து மேன்மைபாராட் டவேண்டாம்; என்றும் என்னத்தை உண் போம், என்னத்தைக் குடிப்போம், என் னத்தை உடுப்போம் என்றும் நாளை க்காகக் கவலைப்படாதிருங்கள்; என் றும் கர்த்தர் கூறியிருக்கின்றார். ஐசுவ ரியமுள்ள ஒரு மனிதன் “ஆத்துமா வே, உனக்காக அநேக வரு~ங்களு க்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. நீ இளைப் பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லு வேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல் லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ள ப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.” (லூக் 12:16-20). நாளைக்காக கவலையடையும் மனிதர்களை நோக்கி: அற்ப விசுவாசிகளே! என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங் கள் சரீரத்துக்காகவும் கவலைப்படுகின்ற மனிதர்களை நோக்கிடாதிரு ங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசே~pத்தவைகள் அல் லவா? என்று கர்த்தர் கூறியிருக்கின்றார். கருப்பொருளாவது, இந்த உலகத்தின் ஐசுவரியமானது எங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது என்ற எண்ணத்தை முற்றுமாய் எங்களைவிட்டு நாம் அகற்றிவிட வேண் டும். எல்லாவற்றிற்கும் மேலாக உன்னதமான தேவன் ஆளுகை செய்கி ன்றார் என்ற உணர்வை எங்களுக்கு தந்தவரைக் குறித்து மேன்மை பாராட்டுவோம். அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளவார்

ஜெபம்:

நன்மைகளின் ஊற்றாகிய தேவனே, கிருபையையும், நியாய த்தையும், நீதியை செய்கின்ற கர்த்தர் நீர் என்றறிந்து உம்மையே நம்பி வாழும் பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 4:14-16