புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 07, 2020)

எங்கள் வாழ்வின் முதிர்ச்சி

கொலோசெயர் 1:28

எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்.


ஒரு வாலிபன், கணிதத் துறையிலே பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடி த்து, முதுகலைப் பட்டத்திற்கான (Master’s Degree) படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தான். அதே வேளையிலே அந்த அயலிலே வசிக்கும் சிறு பையன், பாலர் வகுப்பிலே, இலக்கங்களையும், அடிப்படை கூட்டல் கணக்கையும் படித்துக் கொண்டிருந்தான். முதுகலைப் பட்டப்படிப்பை தொடரும் வாலிபனுக்கு அந்த சிறு பையன் படிக்கும் ஆரம்ப கணி தம் மழலை மொழியாக இருந்த போதிலும், அந்த சிறு பையனுக்கு அது கடினமாகவே இருந்தது. இதற்கொத்ததாகவே, நாங்கள் ஒவ்வொ ருவரும் வாழ்வின் வளர்ச்சியின் பல கட்டங்களிலே இருக்கின்றோம். “என் வாழ்க்கையிலே முப்பது வருடங்களாக பல இன்னல்கள் சோதனைகளை கட ந்து வந்தேன், ஆனால் அந்த சகோ தரன், வாழ்வில் ஏற்பட்டிருக்கும் அற் பமான காரியத்திலே சோர்ந்து போய் விட்டான்” என்று மனிதர்கள் கூறு வதை நாங்கள் கேட்டிருக்கின்றோம். அப்படியாக எங்கள் வாழ்க்கையிலே நாங்கள் அநேக வருடங்களை நாங் கள் கடந்து வந்திருந்தாலும், தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கும் இளம் சகோதரர்களின் நிலையைக் குறித்து புரிந்துணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒரு மனிதன் தன் ஆவிக்குரிய போராட்டத்திலே உண் மையாகவே முதிர்ச்சி நிலையை அடைந்திருந்தால், கிறிஸ்து இயே சுவுக்குள்ளாக வளர்ந்து வரும் மற்றய சகோதர சகோதரிகளைக் குறி த்த கரிசனை அதிகமாக இருக்கும். அதாவது, நாங்கள் கிறிஸ்துவுக் குள் தேறினவர்களாக இருந்தால், மற்றவர்களைக் குறித்த குறைகளி லும் குற்றங்களிலும் தரித்து நிற்காமல், அவர்களும் எங்களைப் போல நாளுக்கு நாள் நிறைவான வளர்ச்சியில் தேறினவர்களாக நிற்கும்படி க்கு, எங்கள் ஆவியின் கனியாகிய நீடியபொறுமையை வெளிக்காட்ட வேண்டும். “என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவா குமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்.” என்று தேவ மனு~னாகிய பவுல் கூறியதைப் போல, சாந்தமுள்ள ஆவியுடன் கிறிஸ்துவின் அழைப்பு அவர்களில் நிறைவேறும்படிக்கு அதிகமாக பிர யாசப்படும் போது, எங்களின் முதிர்ச்சி மற்றவர்களுக்கு வெளிப்படும்.

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள தேவனே, நீர் என்மேல் காண்பிக்கும் இரக்கத்தையும் பொறுமையையும் நானும் மற்றவர்களிடம் காண்பிக்கத் தக்கதாக, உமக்கு ஏற்ற இருதயத்தை என்னில் உருவாக்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 4:19