புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 06, 2020)

உன் சகோதரன் நெருக்கப்படும் போது...

லூக்கா 6:31

மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.


குளிர் நாட்களிலே ஏற்பட்ட சளிச்சுரத்தினால் (influenza) ஒரு மனிதன், இரண்டு கிழமைகளாக நோய்வாய்ப் பட்டிருந்ததுமல்லாமல்;, மூட்டு நோவி னால் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். அதை கண்ட அவ னுடைய மூத்த சகோதரன்: இவன் குளிர்நாட்களிலே ஏற்படுகின்ற சளிச் சுரத்தை தாங்க முடியாதவனாக இருக்கின்றானோ அல்லது பாசாங்கு செய்கின்றானோ?” என்று கூறிக் கொண் டான். அதற்கு பதில் கூறுவதற்கு கூட பெலனில்லாதவனாக அந்த இளைய சகோதரன் மௌனமாக இருந்துவிட்டான். சில கிழமைகளுக்கு பின்பு, அந்த மனிதனுக்கு ஏற்பட்டிருந்த சளிச்சுரம், அவனுடைய மூத்த சகோதரனையும் பற்றிக் கொண்டது. அந்த நேரத்திலே தன் சகோதரன் அனுபவித்த வியாதியின் வேதனையை தானும் உணர்ந்து கொண்டான். “காய்ச்சலும் தலையிடியும் தனக்கு வந்தால் தான் தெரியும்” என்ற பழமொழியை நாங்கள் கேட்டிருக்கின்றோம். ஒரு சகோதரன் குறிப்பிட்ட பிரச்சனையில் அகப்பட்டிருக்கும் போது, பலரும் பலவிதாக பேசிக் கொள்வார்கள். அந்த சகோதரனின் பிரச்சனை: அவனைக் குறித்ததாகவோ, அவன் மனைவி பிள்ளைகளைக் குறித்ததாகவோ அல்லது அவனுடைய வேலையைக் குறித்ததாகவோ இருக்கலாம். ஒருவேளை, அந்த சகோதரன் தான் செய்த குற்றத்தினாலே பெரும் பாதகத்தில் சிக்கியிருக்கலாம். அப்படியாக உங்களில் ஒருவர் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் போது, அந்த சகோதரனை யோ அல்லது சகோதரியையோ குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை சிந்தித்துப் பாருங்கள். அறிந்தோ அறியாமலோ நீங்கள் ஒரு குற்றத்தில் அகப்பட்டு, அதிலிருந்து விடுதலையடைய முடியாமல் இருக்கும் போது, “நான் குற்றம் செய்தேன் அதன் விளைவாக பெரும் பாதகத்தில் அகப்பட்டிருக்கின்றேன். எனக்கு இரங்கி யாரேனும் உதவி செய்ய மாட்டார்களா” என்ற ஏக்கம் அவன் மனதில் இருக்குமல்லவா! எனவே உடன் சகோதரனின் வாழ்வில், அவனது குடும்பத்தில் பிரச்ச னையாக இருக்கலாம் அல்லது பொருளாதார நெருக்கடியாக இருக் கலாம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கலாம். அப்படியான சூழ்நிலையிலே நீங்கள் அகப்பட்டிருக்கும் போது, மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்க ளும் உங்கள் உடன் சகோதரனுக்குச் செய்யுங்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, என்னை சூழ உள்ளவர்களின் வாழ்வில் ஏற்படும் குறைகளை நிறைவாக்கும்படிக்கு அவர்களுக்கு இரங்கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:14