புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 04, 2020)

ஊழியர்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்

2 தெச 3:1-2

உங்களிடத்தில் கர்த்தரு டைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும், துர்க்குணராகிய பொல்லாத மனுஷர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;


உங்களை வழிநடத்த நியமிக்கப்பட்டிருக்கின்ற ஊழியர்களை குறித்து உங்கள் எதிர்பார்ப்பு என்ன? சற்று சிந்தித்துப் பாருங்கள். பொதுவாக, மனிதர்கள் தங்கள் ஊழியர் இயேசு கிறிஸ்துவைப் போல எந்த குறையும் இன்றி ஊழியம் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றார்கள். அந்தப்படியே, தம்முடைய ஊழியர்கள் இருக்கும்படிக்காக இயேசு கிறிஸ்துவும் விரும்புகின்றார். ஊழியர்கள் மட்டுமல்ல, நாங்கள் யாவ ரும் தம்;மைப்போல மாற வேண்டும் என்பதையே இயேசு விரும்புகின்றார். இந்த உலகிலே எங்களை வழிநடத்த நியமிக்கப்பட்ட ஊழியர்கள் எங்களோடு சேர்ந்து ஜீவயாத்திரையிலே ஓடிக்கொ ண்டிருக்கின்றார்கள். நாளாந்த வாழ்க் கையிலே எங்களுக்கு ஏற்படும் போரா ட்டங்களும், உபத்திரவங்களும் அவர் களுக்குமுண்டு. அதைவிட அதிகமாக பிசாசானவன் அவர்களை விழுத்தும்படி க்கு இன்னும் அதிகமாக செயற்பட்டுக் கொண்டிருப்பான். ஏனெனில், ஒரு ஊழி யரின் விழுகையினால் பலர் விசுவா சத்தை விட்டு இடறிப்போக தக்கதான சாத்தியம் உண்டு. இப்படியான சம்ப வங்கள் ஆங்காங்கே நடைபெறும் போது, தேவனுக்கு எதிராக செயற் படும் இவ்வுலக சக்திகள் அச்செய்தி களை வெகுவிரைவாக பரப்பிவிடுகின்றார்கள். ஊழியர்களின் விழுகை யை பிசாசானவன் விரும்புகின்றான். அதன்படிக்கே எங்கள் பிரதான மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்துவையும் சோதித்தான். இயேசுவின் பிர தான சீஷனாகிய பேதுருவை சுளகிலே புடைக்கின்றது போல புடைத்தான். யூதாஸ்காரியோத்தை வஞ்சித்தான். எனவே நாங்கள் யாவரும் எங்களை வழிநடத்துகின்ற ஊழியர்களுக்காகவும், அவர்கள் குடும்பங்க ளுக்காகவும் தினமும் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும். அவ்வப்போது ஏற்படும் குறைகளை கண்டாலும் அவர்களை சபிக்காதிருங்கள். தேவன் அவர்களுக்கு கொடுத்த பொறுப்பை நிறைவேற்றி முடிக்க பிசாசான வனுடைய தூதர்கள் கையினின்று காத்துக் கொள்ளும்படிக்கு, தேவ னுடைய அநாதி தீர்மானம் அவர்களில் நிறைவேறும்படிக்கு அனுதின ஜெபங்களிலே ஊழியர்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, உம்முடைய ஊழியத்தை முன் னெடுத்துச் செல்லும் ஊழியர்களின் வாழ்க்கையிலே உம்முடைய திருச் சித்தம் நிறைவேறும்படிக்கு அவர்களை ஆசீர்வதிப்பீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:8