புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 03, 2020)

யாவரும் தேறினவர்களாகும்படிக்கு…

கொலோசெயர் 1:28

எந்த மனுஷனையும் கிறி ஸ்து இயேசுவுக்குள் தேறி னவனாக நிறுத்தும் படி க்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷ னுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல் லா ஞானத்தோடும் உப தேசம் பண்ணுகிறோம்.


தேவனுடைய அழைப்பைப் பெற்ற தேவ மனிதர்களாகிய நாங்கள் தேறின வர்களாகவும், நற்கிரியைகளை செய்யும்படிக்கு தகுதியுள்ளவர்களாகவும் வளர்ந்து பெருகும் படிக்கே, வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. அதாவது, வேத வசனங்களின் அடிப்படை நோக்கமானது, நாங்கள் இயேசு கிறிஸ்துவை போல தேறினவர்களாவும், நற்கிரியைகளையே செய் கின்றவர்களாகவும் மாற வேண்டும் என்பதாகும். அதன் பலனாக நாங்கள் நித்திய ஜீவனை பரலோகத்திலே சுத ந்தரித்துக் கொள்வோம். அதை மைய மாகக் கொண்டே, வேத வசனங்கள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுத லுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ள வைகளாயிருக்கிறது. (2 தீமோ 3:16-17). ஆனால் பிசாசானவன், வேதவாக் கியங்களைக் கொண்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சோதித்தான். ஆனால், இயேசுவோ அந்த சோதனை க்காரனுக்கு சற்றும் இடங் கொடுக்க வில்லை. ஒடுக்கப்பட்டவன் வாழ்வடையும்படிக்கே வார்த்தையானவர் மனுவாகி இந்த உலகத்திற்கு ஒளியைக் கொடுக்கும் ஜீவ னாக வெளிப்பட்டார். எனவே அந்த ஜீவ வார்த்தைகளை தவறான நோக்க த்திற்கு உபயோகித்து, சக விசுவாசிகளை ஒடுக்கக் கூடாது. தேவனு டைய வார்த்தை எங்களுக்கு நித்திய ஜீவனை கொடுக்கின்றது. அந்த வார்த்தை எங்கள் ஆன்மீக போஜனமாக இருக்கின்றது. அந்த வார் த்தை எங்களுக்கு அருமருந்தாக இருக்கின்றது. அந்த வார்த்தை எங் களை விடுதலையாக்குகின்றது. அந்த வார்த்தை விசுவாசிகளை அல்ல பகைஞனாகிய பிசாசானவனை ஜெயிக்கின்ற பட்டயமாக இருக்கின் றது. அந்த வார்த்தை எங்களை கண்டித்து, தண்டித்து (சிட்சித்து) நடத் துகின்றது. அதன் பலனானது அழிவு அல்ல. மாறாக அன்பிலே பரிசுத் தமுள்ளவர்களாக எங்களை மாற்றுகின்ற அதே வார்த்தை, இறுதி நாளி லே எங்களை நியாயந்தீர்க்கும். ஆனால் அந்த நியாயாசனம் எங்களுக் குரியதல்ல. கர்த்தராகிய இயேசுவே நீதியுள்ள நியாயாதிபதியாக அந்த நியாயாசனத்திலே வீற்றிருப்பார். எனவே நாமும் மற்றய விசுவாசிகளும் தேறினவர்களாகும்படிக்கு தேவ வார்த்தையை பயன்படுத்துவோம்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள பிதாவே, நாங்கள் யாவரும் கிறிஸ்துவைப் போல தேறினவர்களாகும்படிக்கு நாம் கேள்விப்பட்ட அருள்வாக்கை, பயன்படுத்தி பலனை பெற்றுக் கொள்ளும்படி, தெளிந்த புத்தியைத் தந்தருள் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 4:18