புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 02, 2020)

ஆவிக்குரிய யுத்தம்

எபேசியர் 6:18

எந்தச் சமயத்திலும் சகல விதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள்.


இரண்டு நாடுகளுக்கிடையிலே யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டி ருந்தது. வயது காரணமாகவோ, உடல் பெலவீனங்கள் காரணமாகவோ யுத்த களத்திற்கு செல்ல முடியாதிருந்த குடிமக்களில் பலர் எப்ப டியாவது தங்களால் முடிந்த ஆத ரவை தங்கள் நாட்டின் ராஜாவிற்கும், தளபதிக்கும், பட்டாளத்திலே சேவை புரிபவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக இருந் தார்கள். இவர்கள் இராஜபக்தியுள்ள குடிமக்கள். ஆனால், அத்தேசத்திலி ருந்த சிலரோ, தேசத்திற்கு ஆதர வாக இருப்பதற்கு பதிலாக, தங்கள் படைகளை குறித்து குறை கூறுவதி லும், எதிர்த்து யுத்தம் செய்யும் அந் நிய நாட்டு அரசனுக்கு, தங்கள் நாட் டின் இரகசியங்களை குறித்து தூது அனுப்பிக் கொண்டுமிருந்தார்கள். இப் படிப்பட்டவர்களை; துரோகம் செய் கின்றவர்கள் என்று அழைப்பார்கள். எங்கள் வாழ்;க்கையில் நாளாந்தம் ஆவிக்குரிய யுத்தம் உண்டு. அதாவது, நாங்கள் பிதாவாகிய தேவ னின் சித்தத்தை எங்கள் வாழ்வில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் அதற்கு எதிராக பிசாசின் பொல்லாத ஆவிகளின் சேனைகள் எதிர்த்து நிற்கின்றன. எப்படியாவது, தேவ ஊழியர்களை, விசுவாசக் குடும்ப ங்களாகிய எங்களையும் பிதாவின் சித்தம் செய்யும் சிந்தையிலிருந்து பிரித்து, ஒருவரோடொருவர் யுத்தம் செய்ய வைப்பதே பிசாசானவனின் தந்திர உபாயம். அதற்கு இரையாக நாங்கள் அகப்படுவோமென்றால், தங்கள் தேசத்திற்கு துரோகம் செய்கின்ற குடிமக்களைப் போல நாமும் மாறிவிடுவோம். நாங்களும்;, மற்றய விசுவாச குடும்பங்களும் ஆவிக்கு ரிய போராட்டத்தில், பிசாசானவனோடு எதிர்த்து நிற்கின்ற வேளை யில், விசுவாசக் குடும்பங்களின் வாழ்வில் பெலவீனங்களும், குறைவுக ளும்; இருக்கலாம். அவைகளை நாம் சுட்டிக் காட்டி, அவர்களுக்கெ திராக இன்னுமொரு போராட்டத்தை நாங்கள் ஆரம்பித்துவிடக் கூடாது. மாறாக, நாங்கள் அவர்களுக்காக நாள்தோறும் ஊக்கத்தோடு ஜெபி க்க வேண்டும். அவர்கள் தங்கள் பெலவீனங்களை தாங்களே மேற் கொள்ளும்படிக்கு எங்களால் முடிந்த ஆதரவை வழங்க வேண்டும்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, இந்த வாழ்க்கையின் போராட்டத்திலே, எதிரியானவனை மேற்றகொள்ளும்படி உம்மிலும் உம்முடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படும்படி ஞானத்தை தந்தரு ள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:8