புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 30, 2020)

வாழ்வின் தீர்மானங்களை எடுக்க முன்பு...

அப்போஸ்தலர் 13:3

அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.


கர்த்தருடைய சீஷர்கள், கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசி த் துக்கொண்டிருக்கிறபோது: பரிசுத்த ஆவியானவர் பர்னபாவையும் சவு லையும் (பவுல்) நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரி த்துவிடுங்கள் என்று திருவுளம்பற்றினார். அப்பொழுது சீஷர்கள் உப வாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் மேல் கைகளை வைத்து, அவர் களை தேவன் பிரித்தெடுத்த ஊழியத் திற்கு அனுப்பினார்கள். அந்நாட்களி லே, சபைகள் உபத்திரவத்திற்குள்ளா யிருந்தது. பவுலும், பர்னபாவும். பட்ட ணத்தோறும் சென்று சீஷருடைய மன தைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத் திசொல்லி, நாம் அநேக உபத்திரவ ங்களின் வழியாய் தேவனுடைய ராஜ் யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள். அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப் பர்களை ஏற்படுத்திவைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தா ர்கள். இந்த சம்பவங்களை நன்கு கவனித்துப் பாருங்கள். முக்கிய தீர்மானங்களை எடுக்கும் முன்பாக, சீஷர்கள் உபவாசித்து ஜெபம் பண்ணினார்கள். ஏனெனில், தேவனுடைய சித்தம் தங்கள் வாழ்க் கையில், ஊழியத்தில், சபையில் நிறைவேறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்கள். எனவே எங்கள் வாழ்க்கையிலும் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் முன்பு நாங்கள் தேவனுடைய பாத த்திலே தரித்திருந்து ஜெபிக்க வேண்டும். சில வேளைகளிலே. வயது, மற்றும் நோய் காரணமாக ஏற்பட்டிருக்கும் சரீர பெலவீனங்களினால் உபவாசிக்க முடியாத நிலை ஏற்படுவதுண்டு. ஆனால் ஜெபம் செய்வ தற்கு, தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்வதற்கும் நாங்கள் எந்த சாட்டுப் போக்குகளும் சொல்லக் கூடாது. கர்த்தராகிய இயேசு இந்த உலகத்திலே தம்முடைய திருப்பணியை செய்த நாட்களிலே, அவர் தம்முடைய பிதாவை நோக்கி ஜெபம் செய்கின்றவராகவே இருந்தார். பிதாவுடைய சித்தத்தை நிறைவேற்றி முடிப்பதே என்னுடைய போஜனம் என்று கூறியிருக்கின்றார் (யோவான் 4:34, 6:38, லூக்கா 22:42). எனவே எங்கள் தனிப்பட்ட, குடும்ப, வாழ்க்கையிலும் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நித்தமும் நிறைவேற்றுகின்றவர்களாக வாழும்படிக்கு, முக் கிய தீர்மானங்களை எடுக்க முன்பு உபவாசித்து ஜெபம் செய்வோம்.

ஜெபம்:

பராக்கிரமுள்ள தேவனே, இந்த பூமியிலே வாழும்வரை, உம்மு டைய சித்தத்தை நிறைவேற்றும்படிக்கு உம்முடைய வழிமுறைகளை கேட்டு அதன்படி நடக்கும் இருதயத்தை எனக்கு தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மாற்கு 2:20