புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 29, 2020)

மனமிரங்க மறந்துவிடாதிருங்கள்

மத்தேயு 6:14

மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.


ஒரு ராஜா அவனுடைய ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்கத் தொட ங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன்பட்டவன் ஒருவனை அவனு க்கு முன்பாக கொண்டு வந்தார்கள். கடனைத்தீர்க்க அவ னுக்கு நிர் வாகம் இல்லாதபடியால், அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வண ங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றை யும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். அந்த ஊழியக்கா ரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைப்பண்ணி, கடனை யும் அவனுக்கு மன்னித்துவிட்டான். அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிரு ந்தவனாகிய தன் உடன் வேலைக் காரரில் ஒருவனைக்கண்டு, அவனை ப்பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான். அந்த வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உம க்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான். நடந்தவற்றை ஆண்டவனாகிய ராஜா அறிந்த போது, கோபமடைந்து, மனமிரக்கமி ல்லாத அந்த பொல்லாத ஊழியன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்பு க்கொடுத்தான். (மத்தேயு 18: 23-35). பொதுவாக மனிதர்கள் தங்கள் பழைய நிலைமையை வெகு விரைவில் மறந்து போய்விடுகின்றார்கள். அதாவது, எங்கள் பழைய மனுஷனுக்குரிய, அடிமைத்தனத்திற்குரிய மாம்ச கிரியைகளை மறந்து போவது நல்;லது. ஆனால் எங்களுக்கு நன்மை செய்தவர்களையும், எங்கள் தப்பிதங்களை பெரிதுபடு த்தாமல் எங்களுக்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தை (ளுநஉழனெ உhயnஉந) தந்த வர்களையும், எங்கள் குற்றங்களை மற்றும் கடன்களை உதாரத்துவமாக மன்னித்துவிட்டவர்களையும் மறந்துவிடுவது நல்லதல்ல. குறிப்பாக, நான் முன்பு செய்த குற்றத்தை ஒருவர் மனமுவந்து மன்னித்திருக்க, எனக் கெதிராக அதே குற்றத்தை செய்தவனை மன இரக்கமில்லாமல் தண் டனையை வழங்க எத்தனிப்பது தேவனுடைய பார்வையிலே ஏற்புடை யதல்ல. எனவே மனமிரங்குங்கள், மறந்துவிடாதிருங்கள்.

ஜெபம்:

மனதுருக்கமுடைய தேவனே, கிருபையால் என்னை இரட்சித் தவரே, எனக்கெதிராக குற்றம் செய்தவர்களுக்கு மனதுருக்கத்தை காட்டும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 2:1-6