புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 27, 2020)

தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்

2 கொரிந்தியர் 8:7

அல்லாமலும், விசுவாச த்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்க ள்மேலுள்ள உங்கள் அன் பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்தி லும் பெருகவேண்டும்.


“என்னிடத்தில் ஐசுவரியம் இருந்தால், நான் எத்தனையோ பெரும் செய ற்திட்டங்களை ஏழை எளியவருக்கு செய்வேன், தேவ ஊழியத்தை தாங்கி வருவேன்” என்று ஒரு மனிதன் எப்போதும் சொல்லிக் கொள் வான். இது ஒரு நல்ல எண்ணம். கர்த்தருக்கு சித்தமானால் அப்ப டியே ஆகட்டும் (யாக்கோபு 4:13-15). ஆனால், தற்போது எங்களைக் குறித்ததான தேவனுடைய சித்தம் என்ன என்பதைக் குறித்து நாங்கள் ஒவ்வொருவரும் எண்ணமுள்ளவர்க ளாக இருக்க வேண்டும். தர்மசகாய மும், உதாரத்துவமாக கொடுப்பதும் நாளையைக் குறித்த விடயம் அல்ல. நாளைய நாளைக் குறித்து நாங்கள் கவலையடையாமல், இன்று நாங்கள் செய்ய வேண்டியவைகளிலே கருத்து டன் செயற்பட வேண்டும். ஆதிச் திரு ச்சபையின் நாட்களிலே, மக்கெதோ னியா என்னும் நாட்டுச் சபைகள் மிகு ந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப் பட்டார்கள். அந்நாட்களிலே அவர்கள் கொடிய தரித்திரமுடையவர்களாயிரு ந்தும், அவர்கள் உள்ளத்திலே ஏற்பட் டிருந்த பரிபூரண சந்தோ~த்தினாலே, மற்றவர்களுடைய குறைவை நிறைவாக்கும்படி, மிகுந்த உதாரத்துவ மாய்க் கொடுத்தார்கள். அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க தாங்களே மனதுள்ளவர்க ளாயிருந்தார்களென்று தேவ ஊழியராகிய பவுல் அவர்களை குறி த்து சாட்சி கொடுத்தார். நிர்பந்தத்தினாலோ, கட்டளையினாலோ அல்ல, கொடுக்க வேண்டும் என்னும் மனம் அவர்களுக்குள் உண்டாயி ருந்தது. இது அவர்களுக்கு அளிக்கப்பட்ட தேவ கிருபை (2 கொரி 8:1-5). பிரியமானவர்களே, எங்களுடைய பெலத்திற்கேற்றபடிக்கே நாங் கள் தானதர்மங்களை செய்ய வேண்டும் என்பது உண்மை. ஆனால் அந்த கூற்றை, எங்கள் மனக்கடினத்திற்கு சாட்டுபோக்காக பயன்படுத் தாமல், மக்கெதோனியா நாட்டில் இருந்த விசுவாசிகளைப் போல, உதவி செய்ய கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்த வேண்டும். உற்சாகமுள்ள இருதயத்தோடு தர்மகாரியத்தில் நாளுக்கு நாள் பெரு கக்கடவோம்

ஜெபம்:

பரலோக தேவனே, நீர் என்னிடத்தில் ஒப்புவித்ததிலிருந்து எடு த்து, மனமகிழ்ச்சியோடு, உமக்கு உகந்த காணிக்கையாக கொடுப்பதில் பெருகும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உபாகமம் 15:11