புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 25, 2020)

எங்களுக்கு வெளிப்பட்டிருக்கும் தேவ கிருபை

மத்தேயு 9:38

ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.


தாத்தா, நீங்கள் நடுகின்ற மாமரம் மிகவும் சிறிய கன்றாக இருக்கின் றதே, இது வளர்ந்து கனி கொடுக்க எவ்வளவு நாட்கள் எடுக்கும் என்று ஒரு சிறு பையன் கேட்டான். நாட்கள் அல்ல மகனே, இது வளர்ந்து பெரிய விருட்சமாவதற்கு அநேக வருடங்கள் எடுக்கலாம். அதோ பார் அந்த பெரிய பலா மரத்தை, அதை என்னுடைய பாட்ட னார் சிறிய கன்றாக நாட்டினார். என் பாட்டனார் இப்போது இவ்வுலகில் இல்லை ஆனால் அவர் நாட்டிய மரம் பல ஆண்டுகளாக எவ்வளவு பல னை எங்களுக்கும், இந்த சூழலுக்கும் கொடுக்கின்றது அது என்றுமே வெ யிலுக்கு நிழலாகவும், சுவையான கனியைத் தரும் மரமாகவும் இருக்கி ன்றது. நாங்களும் அயலவர்களும் திருப்த்தியான பின்பு, மிகையான வைகளை விற்று அன்றன்டாட செலவுகளை சந்திக்கவும் அது உத வியாக இருக்கின்றது. அதன் நன்மையை அனுபவிக்கின்ற நாம், எங்களுக்கு பின்வரும் சந்ததியினருக்கும் பல நன்மைகளை நாங்கள் விட்டு செல்ல வேண்டும் என்று விளக்கிக் கூறினார். பிரியமான வர்களே, எங்கள் முன்னோர்களை சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் தேவனை அறியாதவர்களாயும்;, விக்கிரக ஆராதனைக் கட்டுகளில் அடிமைகளாகவும் இருந்தார்கள். அப்படி தேவனை அறியாத சந்ததி யில் வாழ்ந்து வந்தபோதும், தேவ கிருபையானது தேவ சேவைக்கு தங்களை அர்ப்பணித்த தேவ ஊழியர்கள் வழியாக அவர்களுக்கு வெளிப்பட்டது. இந்த தேவ ஊழியர்கள் தங்களையும் தங்களிடத்தி லுள்ளவைகளையும் செலவு செய்து, தங்கள் ஜீவனையும் பொருட்டாக எண்ணாமல், தேவனை அறியாத தேசங்களுக்கு மினஷனரிகளாக கட ந்து வந்து ஜீவனுள்ள வித்தாகிய தேவ வசனத்தை விதைத்தார்கள். தேசத்திலே தேவ கிருபை அவர்கள் வழியாக வெளி ப்பட்டது. அவர்களின் பிரயாசங்கள் இன்றும் பலனை கொடுக்கின்றது. அவர்களை தொடர்ந்து வந்த, மற்றய தேவ பிள்ளைகள் வழியாக தேவ கிருபை எங்களுக்கும் வெளிப்பட்டது. இன்னும் தேவனை அறியாமல் பாவ இருளில் அழிந்து கொண்டிருக்கும் ஜனங்கள் ஏரா ளமானவர்கள் இருக்கின்றார்கள். எனவே, அவர்களுக்காக பிரசயாசப் படுகின்றவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். முடிந்தவரை அவர்க ளுக்கு உதவுங்கள். சிறிய விதை பெரும் பலனைத் தரும்.

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, பல பரிசுத்தவான்களின் தியாகங்கள் வழியாக, உம்முடைய கிருபையை இலவசமாக பெற்றுக் கொண்டோம், அந்த கிருபையை மற்றவர்களுக்கும் வெளிப்படுத்த என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 10:1-7