புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 24, 2020)

பெற்ற நன்மையை பெருகச் செய்வோம்

மத்தேயு 25:29

உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.


புறதேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகின்ற ஒரு மனுஷன், தன் ஊழி யக்காரரை அழைத்து, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிட த்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்தும், கொடு த்தான். ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக் கொ ண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். அப்படியே இரண்டு தாலந்தை வாங்கி னவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான். ஒரு தாலந்தை வாங்கி னவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானனுடைய பணத்தைப் புதைத்து வைத்தான். வெகு காலமா னபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத் தில் கணக்குக்கேட்டான். அப்பொழுது ஐந்து தாலந்தை வாங்கினவனும், இர ண்டு தாலாந்து வாங்கினவனும் அதை இரட்டிப்பாக பெருக்கி, எஜமானனிடத்தில் ஒப்புவித்தார்கள். எஜமானன் அவர்களை நோக்கி: அவர்களை பாராட்டி, உன் எஜமானு டைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். ஒரு தாலந்தை வாங் கினவன் வந்து: நான் உமக்கு பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். அவனுடைய எஜமானன் பிரதியுத்தரமாக: பொல்லாத வனும் சோம்பலுமான ஊழியக்காரனே என்று அவனைக் கடிந்து கொண்டு. அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்து ள்ளவனுக்குக் கொடுங்கள். பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவ னைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான். பிரியமானவர்களே, அசதியாய் இருக்கின்றவன், சாட்டுப் போக்குகளை தேடுகின்றான். பெற்ற நன்மையை விரயப்படுத்தும் சோம்பலுள்ள ஊழியக்காரனாக இருக்கி ன்றான். அவனிடத்தில் ஒப்புவிக்கப்பட்டவைகளினால் அவனுக்கோ மற்றவர்களுக்கோ நன்மை உண்டாகப் போவதில்லை. கிறிஸ்துவின் ஊழியர்களாhகிய எங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் அளவின்படி கொடுக்கப்பட்டவைகளுக்கு கணக்கு கொடுக்கும் நாள் ஒன்று உண்டு. எனவே பெற்ற தேவ நன்மையை புதைத்து வைக்காமல், உற்சாகமுள்ளவர்களாக, அதைப் பயன்படுத்தி, பெருகச் செய்கின்றவர்களாக வாழக்கடவோம்.

ஜெபம்:

நீதியின் தேவனே, உண்மையுள்ளவன்(ள்) என என்னிடத்தில் நீர் ஒப்புவித்ததை நான் நிறைவேற்றி முடிக்கத்தக்கதாக, வேண்டிய ஞானத்தையும், பெலனையும் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 26:13-15