புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 22, 2020)

ஆராதனையை குறித்த வாஞ்சை

சங்கீதம் 42:6

என் தேவனே, என் ஆத் துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.


இன்றும் அநேகமான பிரசங்கிமார், தாவீது என்னும் ஆடு மேய்த்து வந்த ஒரு இளைஞனைக் குறித்து அதிகமாக பேசிக் கொள்வார்கள். எப் படியாக அந்த இளைஞன் இடையனாக இருந்து, பல சாவல்களின் மத்தியிலும் தேசத்தின் ராஜாவாக உயர்த்தப்பட்டான் என்பதை குறிப் பிட்டு உபதேசம் செய்வார்கள். பிரசங்கங்களில் மாத்திரமல்ல, தேவா னாகிய கர்த்தரும், தாவீதைக் குறி த்து அதிகமாக குறிப்பிட்டு பேசியிரு க்கின்றார். தாவீதின் வம்சத்திற்கு என் றென்றும் அழியாத ஒரு ராஜ்யபார த்தை ஏற்படுத்தியிருக்கின்றார். அந்த தாவீது என்னும் மனிதனின் ஒரு குண யியல்பைக் எங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு தியானித்துக் கொள்வோம். அந்நாட்களிலே தேவனுடைய பிள்ளை கள் தேவனுக்கு பண்டிகையை ஆசா ரிக்கும்படி எருசலேம் தேவாலயத்திலே கூடி வருவார்கள். இன்று ஆலயத்தி லே நாங்கள் தேவனை ஆராதிக்கும்படி கூடி வருகின்றோம். தாவீதின் நாட்களிலே, தாவீதைக் குறித்த எரிச்சலும் பயமும், அந்த தேசத்தின் ராஜாவுக்கு ஏற்பட்டிருந்ததால், அந்த ராஜா, தேசபற்றும், ராஜபக்தி யுமுள்ள தாவீதை கொன்று போடும்படி பின்தொடர்ந்தான். இதனால், தாவீது ராஜா மலைகளிலும், குகைகளிலும், வனாந்திரங்களிலும், சஞ் சரிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால், தேவனுடைய பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும், துதியு மான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வந்தேன். ஆனால் இப் போது எனக்கு ஆலயத்திற்கு செல்ல முடியவில்லையே என்பதை நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது. என்று தன் மனவேதனையை கூறினார். இன்று எங்கள் வாழ்க்கை எப்படி இருக்கின்றது? சில மனிதர்கள் ஆலயம் செல்லாதிருக்க போதகர் ஏற்றுக் கொள்ளக்கூடிய தகுந்த காரணத்தை தேடுகின்றார்கள். தங் களுக்கேற்றபடி நேரத்தை மாற்றிக் கொள்ள விரும்புகின்றார்கள். அப் படியான சிந்தனை எங்களுக்கு தூரமாக இருக்கட்டும். தாவீதைப் போல நாங்களும் தேவனால் விரும்பப்படத்தக்கவர்களாக, வாஞ்சை யோடும், ஆர்வத்தோடும், தேவனை துதிக்க, அவருடைய வார்த்தை களை கேட்க, அவருடைய சாட்சியை சபை நடுவில் உரைக்க, எங் கள் மனம் ஆசை கொள்ள வேண்டும்.

ஜெபம்:

உள்ளத்தை அறிந்த தேவனே, உம்மை ஆராதிக்கும் ஐனங்களோடே கூடி, உம்மை தொழுது கொள்ளும் ஆர்வம் என்னில் பெருகும்படிக்காய் என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 4:10