புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 21, 2020)

நாட்களை அறிந்து செயற்படுங்கள்

யோவான் 7:37

ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன்.


ஒரு குருவானவர், மிகவும் முக்கியமான ஒரு நீண்ட பயணத்தில், தன்னோடு இணைந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து தன் சீஷர்களோடு பேசிக் கொண்டிருந்தார். அது ஒரு முக்கியமான பிரயாணமானதால், பல நாட்களாக அதற்கென ஆயத்தப்பட வேண்டும் என்று, பல அறிவுரைகளை கூறிவந்தார். அந்த பிரயாணத்தின் ஆரம்ப நாளை யும், ஆரம்பிக்கும் இடத்தையும், செல்ல வேண்டிய தூரத்தையும், வழி யில் எதிர் நோக்கவிருக்கும் சவால் களையும், முடிவில், தாபரிக்கும் இட த்தையும், அதன் மேன்மையையும் குறித்து எடுத்துரைத்தார். அவரு டைய சீஷர்களில் பத்து பேர்களில் ஐந்து பேர், மிகவும் ஆவலுடன் குருவானவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த பிரயாணத்தைக் குறித்து அறிய இன்னும் ஆவலாக இருந்தார்கள். மிகுதியானவர்களோ, குருவானவர் கூறும் காரியங்களைக் குறித்து கவனமற்றவர்களாக இருந்தார்கள். ஆர்வமுள் ளவர்கள் அதிகப்படியான அறிவுரைகளை கேட்டுப் பெற்றுக் கொண்டா ர்கள். ஆர்வமற்றவர்கள் ஏனோ தானோ என்று இருந்ததால், பிரயா ணத்தின் ஆரம்ப நாளையும் இடத்தையும் மறந்து தூங்கிவிட்டார்கள். அவர்கள் எழுந்து பார்த்தபோதோ, குருவானவரையும், மற்றய ஐந்து சீஷர்களையும் காண முடியவில்லை. என்ன செய்வது, எங்கே செல் வது, எப்படிச் செல்வது ஒன்றைக் குறித்தும் அறிவற்றவர்களாக இரு ந்தார்கள். ஆம் பிரியமானவர்களே, இயேசுவின் உபதேசத்தைக் கேட்ட யூதமதத் தலைவர்கள் கடுங்கோபம் கொண்டார்கள், ஜனங்களில் பலர் அவரை அசட்டை செய்தார்கள். ஆனால் இயேசு அவர்கள் மத்தி யிலே நின்று: சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என் னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவதண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். அவரை மனதார பின்பற் றிய சீ~ர்கள் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பெற்று பெரும் பாக் கியத்தைக் கண்டடைந்தார்கள். அந்த அழைப்பின் குரல் இன்று எங்கள் காதுகளில் தொனிக்கப்படுகின்றது. நாங்கள் எவ்வளவு சிறப்புடன் இன்று வாழ்ந்து வந்தாலும், இந்த உலகத்தை விட்டு கடந்து செல்லும் ஒரு நாள் உண்டு. எவரும் அதற்கு விதிவிலக்கு அல்ல. எனவே நாட் களை விரயப்படுத்தாமல், இன்னும் அதிக வாஞ்சையோடு வேத த்தை வாசிப்போம், தேவனை அறிகின்ற அறிவில் வளருவோம்.

ஜெபம்:

அன்பின் பிதாவே, நான் தாபரிக்கும் ஊராகிய பரலோகத்தையும், அதன் மேன்மையையும் எப்போதும் உணர்ந்தவனா(ளா)க, அந்த வாஞ் சையில் பெருகும்படிக்கு என்னை ஆசீர்வதிப்பீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 90:12