புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 20, 2020)

மனதை கடினப் படுத்துவதை விட்டுவிடுங்கள்

மத்தேயு 3:8

மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.


ஆசிரியரின் அறிவுரையை கேட்க விரும்பமில்லாத மாணாக்கன், பெற் றோரின் போதகத்தை தள்ளிவிடும் பிள்ளை, மூப்பர்களின் ஆலோச னைகளை தள்ளிவிடும் வாலிபர்கள், தங்கள் தங்கள் வயதுடையவர்கள் மத்தியிலே குறிப்பிட்ட காலத்திற்கு பிரபல்யமாக இருக்கலாம். ஆனால், இவர்களோ தங்கள் வாழ்க்கையில் பெரிதான ஒரு பாதகத்தை நோக்கி முன்னெடுத்துச் செல்கின்றார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்ன தாக, எருசலேம் நகரம் ரோமரின் ஆட் சிக்கு உட்பட்டிருந்த நாட்களிலே, இர ண்டு குற்றவாளிகளுக்கு அவர்களின் சட்டத்தின்படி மரண தண்டனை தீர் க்கப்பட்டிருந்தது. அந்த இரண்டு குற்றவாளிகளும், இயேசுவோடு கூட, அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தா ர்கள். அதில் ஒருவன், மரணத்தறுவாயில் மனந்திரும்பும் உள்ளமுடையவனாக இருந்தான். மற்றவனோ, இன்னும் சில மணித்தியாலங்களில் மரிக்கப் போகின்றேன் என்று அறிந்திருந்தும், தன் மனதை இன்னும் கடினப்படுத்தி, கடினமாக வார்த்தைகளை பேசுகின்றவனாக இருந்தான். தங்கள் மனதை கடினப்படுத்தி வாழ்கின்ற மனிதர்கள் வயோதி பத்தை அடைந்தாலும் அல்லது நோய் துன்பங்களினால் பீடிக்கப்ப ட்டிருந்தாலும், தங்கள் கௌரவத்தைவிட்டுவிடக் கூடாது என்று நல் ஆலோசனைகளை தள்ளி, மனந்திரும்ப மனதில்லாமல் சுயபெருமை க்கும் அகங்காரத்திற்கும் அடிமைகளாக கடந்து போகின்றார்கள். பிரியமானவர்களே, உங்களுடைய வயது எத்தனையாக இருந்தாலும், இன்றே வேத வசனத்தின் வெளிச்சத்தில் சிந்தனை செய்ய ஆரம்பியு ங்கள். எடுத்துக்காட்டாக, “இயேசு சொன்னார்: உங்களை நிந்திக்கிற வர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.” என்ற வசனத்தை கேட்கும் போது, நாங்கள் இந்த உலக அளவுகோலின்படி உயர்ந்தவர்களாக அல்லது தாழ்ந்தவர்களாக இருந்தாலும், எங்கள், மதக் கொள்கைகள், கல்வி, அந்தஸ்து, எங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துவதற்கு இடங் கொடுக்காமல், இயே சுவின் வார்த்தையின்படி எங்களை நிந்திக்கின்றவர்களுக்காகவும், துன் பப்படுத்துகின்றவர்களுக்காகவும் ஜெபிக்கும்படிக்கு எங்கள் மனம் மாற வேண்டும். மனம்திரும்புதலுக்கேற்ற நல்ல கனிகளை, செயற் பாடுகளை, வாழ்க்கை முறை மாற்றங்களை எங்கள் வாழ்வில் வெளி க்காட்ட வேண்டும்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, எப்போதும் உம் வசனத்தை கேட்டு, அதைத் தியானித்து, அதன்படி என் வாழ்க்கை நாளுக்கு நாள் மாறும் படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து நடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 3:9