புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 17, 2020)

நித்திய மகிழ்ச்சியின் நாள் வரைக்கும்...

ஏசாயா 60:20

கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்.


இந்த உலக போக்கின் பிரகாரம் அந்தகார இருள், மனிதர்களின் மனக் கண்களை குருடாக்கிவிடுகின்றது. மனிதர்கள் கண்கள் இருந்தும் காணா மலும், காதுகள் இருந்தும் கேளாமலிருக்கிறவர்களாயும், கற்று தேறி யும் அறிவில்லாதவர்களாக மாயை பின்பற்றுகின்றவர்களாகவும் மாறி விடுகின்றார்கள். இது ஏன்? எல்லா மனுஷருடைய வாழ்க்கையையும் பிரகாசிப்பிக்கின்ற மெய்யான ஒளியாக இயேசு, வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைக ளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளி யைப்பார்க்கிலும் பாவ இருளை விரு ம்புகின்றார்கள். அதனாலே தாங்களே தங்கள் ஆக்கினைத்தீர்ப்புக்கு காரணர் களாக மாறிவிடுகின்றார்கள். தேவனை அறி யாத நாட்களிலே, நாங்களும் உலகத்தினால் உண்டான கேட்டின் இருளிலே வாழ்ந்து வந்தோம். உள்ளத்தை பிரகாசிப்பிக்கின்ற ஜீவ ஒளியாக இயேசு எங்கள் வாழ்க்கையிலே வந்தார். தம்முடைய தெய் வீக ஒளியை எங்கள் உள்ளத்தில் வீசச் செய்தார். புறம்பே இந்த உல கிலே பாவ காரிருள் சூழ்ந்திருந்தாலும், நாங்கள் இருளிலே மருளாத படிக்கு இயேசு வழியாக எங்கள் மனக்கண்கள பிரகாசிப்பிக்கப்;பட்டி ருக்கின்றது. அந்த பிரகாசம் மங்கி அணைந்து போகாதபடிக்கு பரி சுத்த ஆவியானவர் எங்களை அனல்மூட்டி எரிய விடுகின்றார். எனவே நாங்கள் அந்தகார இருளின் கிரியைகளை கண்டு பயந்து நடுங்குகி ன்றவர்கள் அல்லர். மாறாக, இந்த உலகத்திலே பிரகாசிக்கின்ற ஒளிச் சுடர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றோம். இன்று எங்கள் உள்ளத்திலே பிரகாசிக்கின்ற தெய்வீக பேரொளி, நாங்கள் சென்றடையும் நித்திய நகரமாகிய பரலோகிலே, பிரதியட்சமாய் பிரகாசிக்கும். அங்கே “இனி சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தர் உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை. கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம். நித்திய மகிமையிலே சேர்ந்திடும் அந்த நாளைக் குறி த்த விசுவாசத்தில் உறுதியாய் தரித்திருப்போம். விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராடுவோம். அழைக்கப்பட்ட அழைப்புக்கு பாத் திரராக இருக்கும்படிக்கு, எங்கள் ஜீவனுள்ள நாளெல்லாம் எங்களை அழைத்த உன்னதமான தேவனுடைய புண்ணியங்களை, எங்கள் வாழ் க்கையின் நடைமுறையினால் மற்றவர்களுக்கு காண்பிப்போம்.

ஜெபம்:

சகலவித ஆறுதலின் தெய்வமே, நம் முன்னோர்களின் நற்சாட்சி யின் வாழ்வை கவனித்து, வெற்றி வாழ்வை வாழும் வழிகளை கற்றுக் கொள்ளும் இருதயத்தைத் தந்து நடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 8:12