புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 16, 2020)

விடியலைத் தேடும் மாந்தர்கள்

சங்கீதம் 57:1

எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக் கொள்ளுகிறது. விக்கினங்கள் கடந்து போகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.


“இரவுக்கும் எல்லை ஓர் விடியல் அன்றோ” என்று ஒரு கிறிஸ்தவ பாடலின் அடிகள் அழகாக தொகுக்கப்பட்டிருக்கின்றது. சூரியன் மறை ந்து, பொழுதுபட்டு கார் மேகங்கள் சூழ்ந்து கொள்ளும் இரவுகள் வருவதுண்டு. ஆனாலும் அந்த இரவு நீடித்திருப்பதில்லை. அது சில மணி த்தியாலங்கள்வரை நீடித்தாலும் பொழுது விடிந்து விடும். அதுபோலவே, கண்ணீரின் பள்ளத்தாக்குகளை கடக்கும் போதும் காரிருள் போன்ற நாட்கள் எங்கள் வாழ்க்கையில் வரும் போதும் எதையுமே சிந்தித்து செய லாற்ற முடியாத நிலை. எவராலும் எங்களுக்கு உதவ முடியாது. எதிர் நோக்கும் பிரச்சனைகளை யாருக்கும் எடுத்துச் சொல்ல முடியவில்லை. சொன்னாலும், என் நிலையை யார்தான் புரிந்து கொள்வார்கள் என்ற கேள்வி யும் மனதில் தோன்றும். ஆனால் அதற்குரிய பதில் உன்னதமான கர்த் தரிடத்திலே உண்டு. “இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தி யானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருங்கள்;. அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகும்போது, அவர் தமது சிறகு களாலே உங்களை மூடுவார்;.” சஞ்சலமும் தவிப்பும் நிறைந்த கச ப்பான அனுபவங்களும் ஒரு இராத்திரியைப் போல கடந்து போகும். அந்த காரிருள் போன்ற விக்கினங்கள் கடந்து போகும்வரைக்கும் உன்னதமாவருடைய மறைவில், சர்வவல்லவருடைய நிழலில் தங்கியி ருங்கள். “இரவுக்கும் எல்லை ஓர் விடியல்” என்பதை நன்கு உணர் ந்து கொள்ளுங்கள். விடிவெள்ளி நட்சத்திரமாக இருக்கின்ற இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள் (வெளி 22:16). “உம்மிலே பெலன் கொள்ளுகிற மனுஷனும் தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்;.” எனவே பொறுமையை இழந்து, வாழ்வில் நோவுகளை இன்னும் அதி கமாக கூட்டிக் கொள்ளாமல், கர்த்தருக்கு காத்திருங்கள். விசுவாச வார் த்தைகளை தியானம் செய்யுங்கள். வேதத்திலுள்ள பரிசுத்தவான்களின் சாட்சியான வாழ்க்கையை தியானம் செய்யுங்கள். கர்;த்தர் உங்க ளோடு கூட இருந்து வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

நெருக்கடி வேளையில் புகலிடமான தேவனே, மனதின் போராட்டங்களின் மத்தியில் மாய்ந்து மடிந்து போய்விடாதபடி, பொறுமையுடன் உம்முடைய பாதத்தில் தரித்திருக்க என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28