புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 15, 2020)

விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு

நீதிமொழிகள் 15:1

மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.


ஒரு வாடகைவீட்டிலே வசித்து வந்த மனிதனுக்கும், அந்த வீட்டின் சொந் தக் காரனுக்கும் இடையிலே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவ் வப்போது சில வாக்குவாதங்கள் ஏற்பட்டது. இந்த நிலை ஒன்ற ன்பின் ஒன்றாக பல விடயங்களில் ஏற்பட்டதால், அந்த வீட்டின் வாடகை ஒப்பந்தத்தை உடைத்து விட்டு, தன் குடும்பத்தோடு இன்னு மொரு வீட்டிலே வாடகைக்கு அமர் ந்து கொண்டான். இந்தப் புதிய சொந் தக் காரரோடு முரண்பாடுகள் இல்லா மல், காரியங்கள் சுமுகமாக போய்க் கொண்டிருந்தது. அந்த மனிதன் தன் மனைவியை நோக்கி: “பார்த்தாயா, இந்த வீட்டுச் சொந்தக் காரன் நல்ல மனிதன், கடந்த ஆறு மாதங்களாக பெரிய பிரச்சனைகள்; இல்லாமல் வாழ்கின்றோம் என்று கூறினான். மனைவி மறுமொழியாக: இந்த வீட்டு சொந்தக்காரர் முன்னைய வீட்டின் சொந்தக் காரரைவிட புரிந்துணர்வு உள்ள மனி தன் என்பது மெய்தான், ஆனால் அதற்கு மேலாக எங்கள் புரிந்து ணர்விலும் பெரிதான மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. நாங்கள் கருத்து முரண்பாடுகளை வாக்குவாதங்களாக்காமல் பொறுமையுடன் இருக்க கற்று கொண்டிருக்கின்றோம்” என்றாள் (ரோமர் 12:17-18). இன்று மனிதர்கள் தங்கள் மனநிலையை மாற்றி, விட்டுக் கொடுத்து, தீமை யை நன்மையினால் மேற்கொள்வதற்கு பதிலாக, எந்த சிந்தனையும் இன்றி, வீட்டை விற்று, வேறொரு வீட்டிற்கும், பாடசாலைகளை விட்டு வேறு பாடசாலைகளுக்கும், சபைகளை விட்டு வேறு சபைக ளுக்கும், திருமண ஒப்பந்தங்களை உடைத்து, புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதும் சகஜமாக மாறிக் கொண்டு போகின்றது. மனம் மாற்றமில்லாமல் எந்த ஒரு உடன்படிக்கையும் நிலைநிற்கப் போவதில்லை. எனவே எந்த ஒரு ஒப்பந்தத்தையும் உடைக்க முன்பு, முதலில் தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நன்றாக சிந்தனை செய்யுங்கள். நாங்கள் உயரே வானத்திற்கு சென்றாலும், பாதாளத்திலே படுக்கை போட்டாலும், தேவனுடைய வழி மாறிப் போகப் போவதில்லை. இந்த உலகத்தின் போக்கில் வாழ்க்கையை வென்று விடுவேன் என்று வாழாமல், எங்கள் மனம் மறுரூபமாக வேண்டும். சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆத லால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.

ஜெபம்:

நன்மையின் ஊற்றாகிய தேவனே, நான் தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்ல, என் மனம் உம் வார்த்தையின் வெளிச்சத்தில் மறுரூபமாக வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - ரோமர் 12:21