புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 14, 2020)

சுய அனுதாபங்கள் தலைதூக்கும் போது

சங்கீதம் 42:8

ஆகிலும் கர்த்தர் பகற் காலத்திலே தமது கிரு பையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப் பஞ்செய்கிறேன்.


தாவீது என்னும் மனிதனின் வாழ்க்கையிலே அவருடைய குடும்பத் தாரால், நாட்டு மக்களால், தேசத்தின் அதிகாரிகளால் ஏற்பட்ட துன்பங் கள் ஏராளம். அவற்றுள் சில அவர் தானே தமக்கு ஏற்படுத்திக் கொ ண்ட காயங்கள் (self inflicted wounds). தேசத்தை ஆட்சி செய்த சவுல் ராஜா, தனக்கு அடுத்த ராஜாவாக, தன் சந்ததியார் அல்லாமல், தாவீதை கர்த்தர் தெரிந்து கொண்டார் என்று அறிந்த போது, தாவீதைக் கொன்றுபோடும்படி தன் சேனையோடு பின் தொடர்ந்தான். குற்றம் ஏதும் செய்யாத தாவீதோ, நீண்ட காலமாக: மலைகளிலும், கெபிகளிலும், அந்நிய தேசங்களிலும் சஞ்சரித்து வந்தான். அந்நாட்களிலே அவர் வெகுவாய் மனவேதனைப்பட்டார். எனினும், தன் உள்ளத்தை துக்கமான உணர்வுகளு க்கு அடிமையாக்கி சுய அனுதாபத் திலே (Self Pity) தரித்து நிற்கவில்லை. தன் மனம் தன்னைக் குறித்து சுட்டிக் காட்டும் அவல நிலையை கேட்காமல், தன் ஆத்துமாவை நோக்கி அவர் பேசினார். “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு, அவர் சமுகத்து இரட் சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது. ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.” முடிவிலே அவை அனைத்திலிருந்தும் வெற்றிப் பெற் றார். எனவே, எங்களுக்கு நெருக்கங்கள் ஏற்படும் போது நாங்களும் சுயஅனுதாபத்திற்குள்ளே மூழ்கிப்போகக் கூடாது. எங்கள் சுய நினை வுகளும் நிந்தனைகளும் எமது வாழ்வை மேற்கொள்ள விடாமல், எங்கள் மனதை நோக்கி: நீ கலங்காதே, திகையாதே ஜெயங் கொண்ட கிறிஸ்து உன்னோடிருக்கின்றார்” என்று அறிக்கை செய்ய வேண்டும். தேவனுடைய கிருபை எப்போதும் எங்களோடு கூட இரு க்கின்றது. ஆவி, ஆத்துமா, சரீரம் சோர்ந்து போகும் வேளைகளிலே, தேவனைத் துதியுங்கள், தெய்வீக கானங்களை பாடுங்கள். கர்த்தரி டத்தில் உங்கள் வேண்டுதலைத் தெரியப்;படுத்துங்கள். உலகத்தை ஜெயித்த இயேசு எங்களோடு இருக்கின்றார்.

ஜெபம்:

வெற்றி தரும் தேவனே, என்னை சூழ்ந்திருக்கும் நெருக்கங் களைக் கண்டு, நான் சுய அனுதாபத்தில் மூழ்கிவிடாமல், உம்மை நோக்கிப் பார்த்து சூழ்நிலைகளை ஜெயிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 41:10