புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 13, 2020)

வேதனை தரும் மனப் புண்கள்

சங்கீதம் 147:3

இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகி றார்.


நெருக்கங்களும் துன்பங்களும் மனிதர்களின் வாழ்க்கையிலே ஏற்படும் போது, பொதுவாக அதன் காரணத்தை மற்றவர்களின் மேல் போட் டுவிடுவதுண்டு. சிலர் பிசாசை குற்றம் சாட்டுவார்கள், வேறு சிலர் மற்றய மனிதர்கள் மேல் குற்றத்தைப் போட்டுவிடுவார்கள், இன்னும் சிலர் கடவுளை குற்றம் சாட்டி விடுவார்கள். அதாவது, தன்னுடைய வாழ்வில்; ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கு தான் எவ்வளவேனும் பொறுப்பு அல்ல, மற்றவர்களே காரணம் என்ற தீர்மானத்திற்கு வந்து விடு கின்றார்கள். சில சந்தர்ப்பங்களிலே, எங் கள் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு குறி ப்பிட்ட பிரச்சனைக்கு மற்றவர்களே மூல காரணிகளாக இருக்கலாம். காரி யம் எப்படியாக இருந்தாலும் குற்றம் சாட்டுதலில் தரித்து நிற்பது எங்கள் வாழ்க்கையை மேலும் பின்னடையச் செய்யும். உதைபந்தாட்ட விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் விளை யாட்டு வீரன், எதிரணியினர் செய்த முறைதவறிய செயலை (Foul) பற்றியே போட்டி நேரம் முழுவதும் அலட்டிக் கொள்வானாக இருந்தால் அவன் அந்தப் போட்டியில் சிறந்து விளங்கப் போவதில்லை. கட ந்த கால பின்னடைவுகளில் துக்கித்துக் கொண்டிருந்தால், நிகழ்காலத் தில் செய்ய வேண்டியவைகளை நாங்கள் தவறவிட்டுவிடுவோம் அதனால் எங்கள் எதிர்காலத்தை நாங்களே மிகவும் கடினமாக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். மற்றவர்களை குற்றம் சாட்டிக் கொண்டு வாழும்போது, எங்கள் உள்ளத்தில் எங்களை அறியாமலே கசப்பு ஒட் டிக் கொள்ளும். அது என்புருக்கி நோயைப் போல எங்கள் வாழ்வை பெலனற்றுப் போக செய்துவிடும். வாழ்வை களிப்புடன் கழிக்க வேண் டிய சந்தோஷமான நாட்கள் மனநிறைவற்ற நாட்களாக கடந்து போய் விடும். கடந்ததை நினைத்து கலங்கிக் கொண்டிருக்காமல், வேதனை தரும் மனப்புண்களுக்கு காயம் கட்டும் பரிகாரியாகிய கர்த்தரை நோக் கிப் பாருங்கள். குற்றம் சாட்டுகின்றவனாகிய பிசாசானவன், நாங்கள் தன்னைப் போலவே குற்றம் சாட்டுகின்றவர்களாக வாழ்ந்து ஈற்றிலே அழி ந்து போகும்படிக்கே விரும்புகின்றான். ஆனால், அன்புள்ள கர்த்தர் இயேசு, இருதயம் நொறுக்குண்டவர்களை குணமாக்குகின்றவர். மனப் புண்களினால் வேதனைப் படுகின்றவர்களை ஆற்றித் தேற்றி காயம் கட்டுகின் றவர். அவரிடம் உங்கள் நிலையை இன்று கூறுங்கள்

ஜெபம்:

என் நிலையை நன்றாக அறிந்த தேவனே, எனக்கு வேதனை தரும் மனக் காயங்களை நீர் அறிந்திருக்கின்றீர். அவைகளிலிருந்து நான் முற்றிலும் விடுதலையாக என்னை குணப்படுத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரிந்தியர் 12:9