புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 12, 2020)

உங்களுக்குச் சமாதானம்

யோவான் 20:19

இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்..


பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் இயேசுவை மரண ஆக்கினை க்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். இயேசுதாமே, இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம் ஆனால் இவை கள் சம்பவித்து மூன்றாம் நாளாகிவிட்டது என்று சில சீஷர்களும்; துக்கித்துக் கொண்டிருந்தார்கள் (லூக்கா 24:21). சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக இயேசுவோடு வாழ்ந்தவர்கள், அவர் சென்ற இட மெங்கும் அவரை பின்பற்றிச் சென்ற வர்கள், அற்புதமான காட்சிகளை கண் டவர்கள், ஆனால் தாங்கள் எதிர்பார் த்திருந்த காரியம் கைகூடவில்லை என நம்பிக்கை இழந்து போனார்கள். மனிதர்களால் தங்களுக்கு தீங்கு ஏற்படும் என்று கலங்கி நின்றார்கள். இப்படியான சூழ்நிலையிலே, வாரத்தின் முதல்நாளாகிய அன்றை யதினம் மாலை வேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள். (யோவான் 20:19-20). பிரியமானவர்களே, எங்களுடைய வாழ்க்கையிலே, எதிர்நோக்கும் சவால்களினால் கர்த்தர் எங்களை மறந்தாரோ, கைவிட்டாரோ என்ற எண் ணங்கள் சிந்தையில் தோன்றலாம். இந்த உலகத்தினால் உண்டாகும் அச்சம் மனதை கலங்கடிக்கலாம். நான் வீணாய் ஓடினேனோ? விரு தவாய் காரியங்களை செய்தேனோ என்று பாதிவழியில் தரித்து நிற்கலாம். ஆனால், எங்கள் அன்புள்ள கர்த்தராகிய இயேசு, எங்களை மறந்து போகின்றவர் அல்லர். அவரே எங்கள் சமாதான காரணர். அவர் எங்களை ஆற்றித் தேற்றி, பெலப்படுத்தி, நாங்கள் உயி ரோடு இருக்கும்வரை இன்னுமாய் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டிய பெலனைத் தந்து வழிநடத்திச் செல்வார். நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். இன்றைய நாளிலே, நாங்கள் கர்த்தராகிய இயேசு மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த நாளை’ நினைவுகூருகின்ற வேளையிலே, அவர் மறுபடியும் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படி அவரைப் பற்றும் விசுவாசத்திலே உறுதியாக நிலைத்திருங்கள். கர்த் தருடைய சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளுகை செய்யட்டும்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, எந்த சூழ்நிலையிலும், மனம் தளர்ந்து போய் விடாமல், உம்முடைய வாக்குத்தத்தத்தை உறுதியாய் பற்றி கொண்டு விசுவாசத்தில் நிலைத்திருக்க என்னை பெலப்படுத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 2:25-28