புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 11, 2020)

வேதனையின் மத்தியில் மன்னிப்பின் ஜெபம்

லூக்கா 23:34

அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.


பிலாத்து என்னும் ரோம அதிகாரி இயேசுவை விடுதலையாக்க மனதாய் யூத மதத் தலைவர்களையும், ஜனங்களையும் நோக்கி: இயேசுவினிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான். ஆனால் பிர தான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனங்களும் அவர்மேல் பிடிவாத மாய்; பொய் குற்றச்சாட்டுகளைக் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இயே சுவை சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள். ரோம படைத்தலைவனாகிய நூற்றுக்கு அதிபதி சிலு வையில் சம்பவித்ததைக் கண்டு: மெய் யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயி ருந்தான் என்று சொன்னான். கருப் பொருளாவது, இயேசுவை சிலுவை யில் அறையும்படி பொய்க் குற்றம் சாட்டிய யூதமதத் தலைவர்களும், ஜனங்களும், இயேசுவை பாடுகளுக் குட்படுத்தி, சிலுவையில் அறைந்த ரோமர்களும் இயேசு நிரபராதி என்பதை அறிந்திருந்தும் நீதியை நிறை வேற்றாமல் அநீதியையே செய்தார்கள். தேற்றுவார் யாருமில்லாமல், படு வேதனையின் மத்தியிலே, சிலுவையிலே தொங்கிக் கொண்டி ருக்கும் இயேசு, சுய அனுதாபத்தை தேடவில்லை. தனக்கு தீர்ப்பு செய்து, அநீதியை நிறைவேற்றுகின்றவர்கள், நித்திய ஆக்கினைத் தீர் ப்புக்குள்ளாகாதபடிக்கு அவர்களுக்காகவும் மரிக்கும்; தறுவாயில், பிதா விடம் பரிந்து பேசினார். அவர்கள் என்னத்தை செய்கின்றார்கள் என் பதை அறியாதபடி அவர்களுடைய மனக்கண்கள் குருடுபட்டிருந்தது. அருள் நாதர் இயேசு: இவர்களை மன்னியும் என்று ஜெபித்தார். பிரி யமானவர்களே, நாங்கள் எந்தக் குற்றமும் செய்யாதிருக்க, எங்களை குற்றவாளிகளாக நியாயந்தீர்க்கின்றவர்கள் இந்த உலகிலே இருக்கி ன்றார்கள். அவர்கள் எங்கள் குடும்பத்தவர்களாகவோ, நண்பர்களா கவோ, இனஞ்சனங்களாகவோ, சகவிசுவாசிகளாகவோ, அதிகாரிகளா கவோ, அயலவர்களாகவோ, அந்நியர்களாகவோ இருக்கலாம். அப்ப டியான அநியாயத்தை அனுபவிக்கும் நிலை மிகவும் கடினமானது. ஆனாலும், எங்களுடைய கர்த்தரும் மீட்பருமாகிய இயேசு வாழ்ந்து காட்டியபடி, எந்த சூழ்நிலையிலும் நாங்கள் எல்லோரையும் மன்னி க்கவும், எங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் எங்களைத் துன்பப்ப டுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் செய்யப்; பழகிக் கொள்ள வேண் டும்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, எந்த கடினமான சூழ்நிலையிலும், மற்றவர்களை மன்னிக்கவும், அவர்களின் அறியாமைக்காக வேண்டுதல் செய்யவும் எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - மத்தேயு 5:44