புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 10, 2020)

இன்றே இரட்சண்ய நாள்

ஏசாயா 53:5

நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கி னை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.


பாவிகள், திக்கற்றவர்கள், திடனற்றவர்கள், ஏழைகள், எளியர்கள், பெலவீனமுள்ளவர்கள், சமுதாயத்தினாலே புறக்கணிக்கப்பட்டவர்கள், அநாதைகள், வாழ்விழந்தவர்கள், அடிமைத்தன கட்டுக்களில் சிக்கியிருப்போர்கள் மற்றும் தனிமையிலே வாடுவோர்கள், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற எந்த பாகுபாடுகள் எதுவும் இல்லாமல், யாவரும் நித்திய ஆக்கினையிலிருந்து விடுதலையாக்கப்பட்டு, முடிவில்லாத பேரின்ப வாழ்வை பரலோகத்திலே வாழ வழிவகுக்கும்படிக்கு தேவ குமாரனாகிய இயேசு தன்னைத் தாழ்த்தி இந்த உலகத்திற்கு வந்தார். மனிதகுலத்தின் பாவத்தை தன்மேல் ஏற்றுக் கொண்டு தம் உயிரை தியாகம் செய்தார். அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவரு மாயிருந்தார்;. அவரைவிட்டு, நம்மு டைய முகங்களை மறைத்துக் கொண்டோம்;. அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறு மைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறு க்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஆம் பிரி யமானவர்களே, இந்த உலகத்தையும், அதிலுள்ள மனிதர்களின் போக் குகளையும் சற்று சிந்தித்துப் பாருங்கள்! நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது. நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். ஆனால் நாம் பாவிகளாகயிருக்கையில் இயேசு கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். அந்த அன்பானது மாறிப்போகும் மானிட அன்பு அல்ல. அது என்றும் மாறாத மாசற்ற தூய அன்பு. இன்று உங்கள் வாழ் க்கை எப்படிப்பட்ட பாதகமான சூழ்நிலையின் நடுவிலிருந்தாலும், இனி விடிவு இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுப் போனாலும், உங்களுக்காக சிலுவையில் பலியான இயேசுவை நோக்கிப் பாருங்கள். இயேசுவின் நாமத்தை விசுவாசத்தோடு அறிக்கையிடுங்கள். தம்மண்டை வந்தோரை தள்ளாத இயேசு உங்களை அழைக்கின்றார்.

ஜெபம்:

அன்பான பிதாவே, நீர் ஒருவரே என் நிலைமையை நன்றாய் அறிந்தவர். எந்த சூழ்நிலையிலும் மாறாத உம்முடைய அன்பினாலே என்னை அரவணைத்து காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 5:8