புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 09, 2020)

இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுவோம்

யோவான் 13:15

நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.


“இந்த அயலிலுள்ள மனிதர்களைவிட நான் பரவாயில்லை” என்று ஒரு மனிதன் தன் உள்ளத்தில் கூறிக் கொண்டான். இப்படியான எண் ணங்கள் ஒரு மனிதனில் தலை தூக்கும் போது, அவனை அறியாமல் அவன் உள்ளத்தில் பெருமை ஆட்கொள்ள ஆரம்பிக்கின்றது. எங்க ளில் பெரியவன் யார்? அல்லது உயர்ந்தவன் யார்? என்ற கேள்வி அன்று இயேசுவின் சீஷர்கள் மத்தியிலே இருந்தது. “உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழி யக்காரனாயிருக்கக்கடவன்.” என்று இயேசு கூறியிருக்கின்றார். மேலும், இராப்போஜன பந்தியை அனுசரித்த அந்த இரவிலே, தம்முடைய சீஷர்க ளின் கால்களை கழுவி, அவர்களுக்கு தாழ்மையின் மேன்மையை வெளிப்படுத்தினார். ஆகவே, இவை ஊழியர்களுக்குரிய படிப்பினைகள் என்று சிலர் எண்ணிக் கொள்வதுண்டு. ஆனால் உயர்ந்தவன் யார்? பெரிய வன் யார் என்னும் எண்ணம் ஏதோ ஒரு வகையில் மனிதர்களின் உள் ளத்திலே ஒட்டிக் கொள்வதுண்டு. இந்த நிலை அவரவர் குடும்பத் தைக் குறித்ததாகவோ, பிள்ளைகளை குறித்ததாகவோ, மற்றும் கல்வி, அந்தஸ்து, வேலை போன்றவையை குறித்ததாகவோ இருக்கலாம். ஆலயத்திற்கு சென்றால் நான் தாழ்ந்த மனதுடையவன் மற்றும்படி என்பாட்டிற்கு உலக அளவுகோலின்படி வாழ்க்கையை நடத்திக் கொள்வேன். கர்த்தராகிய இயேசுவின் பூவுலக பணியை சற்றுசிந்தி த்துப் பாருங்கள். தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து, பாத்திரத்தில் தண்ணீரை வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டி க்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். (யோவான் 13:5-6). அதை இயேசு கடமைக்காக செய்யவில்லை. அவர் விண்ணுலகின் வேந்தனாக இருந்தும், மரண பரியந்தம் தம்மைத் தாழ்த்தி னார். அதன் கருப்பொருளாவது நாங்கள் யாவரும் தாழ்மையுள்ள சிந்தையுடையவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் இந்த உபதேசங்களை நன்கு அறிந்திருக்கிறோம். அறிந்தவைகளை எங்கள் அனுதின வாழ்க்கையில் கைகொள்வோமானால் பாக்கியவான்களாயிருப்போம். எங்கள் மீட்பராகிய இயேசுவைப்போல நாமும் தாழ்ந்த எண்ணம் உள் ளவர்களாக வாழக்கடவோம்.

ஜெபம்:

பரலோக தேவனே, எந்த நிலையிலும் என்னுடைய நிலையைக் குறித்த பெருமை என் வாழ்வில் தலை தூக்காமல், வாழ்வின் கருப் பொருளை உணர்ந்தவனா(ளா)க வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 23:11