புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 08, 2020)

தேவனை அறிந்தவன் யார்?

1 யோவான் 2:3

அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.


ஒரு மனிதனானவன், அவன் வசிக்கும் ஊரிலுள்ள நீதிமன்றத்தில் நீதிபதியாக கடமையாற்றி வருபவர் தனக்கு நன்கு அறிமுகமானவர் என்றும், அவர் தன்னுடன் அநேக வருடங்களாக கல்வி கற்றவரென் றும், தன் மனைவிக்கும் கிட்டின சொந்தமானவர் என்றும் அடிக்கடி சொல்லிக் கொள்வான். அந்த மனிதனானவன் கூறிய யாவையும் உண் மையே. அதனால் அந்த ஊரிலுள்ள அயலவர்கள், நீதிபதிக்கு நன்கு அறிமுகமான அந்த மனிதரோடு ஒரு சச்சரவுக்கும் போகாதபடி தவிர்த்துக் கொண்டார்கள். இப்படியாக பல ஆண் டுகள் சென்ற பின்பு, குறிப்பிட்ட அந்த மனிதன், ஊரிலே நடைபெற்ற கலவர மொன்றிற்கு காரணமாகிவிட்டான். அவ னு க்கு எதிராக அயலவன் ஒருவன் வழக்கு தாக்குதல் செய்தான். அந்த அயலவனோ நீதிபதிக்கு அறிமுகமான வன் அல்ல. வழக்கின் நாளன்று, நீதி பதிக்கு அறிமுகமானதால் ஏதும் சலுகை கிடைக்கும் என்று எதிர்பார்த் திருந்த அந்த மனிதன், ஏமாற்றமடைந்தான். ஏனெனில் நீதிபதியோ நீதியாய் நியாத்தீர்ப்பை வழங்கினார். அவன் நீதிபதிக்கு அறிமுகமா னவனாக இருந்தாலும், அவன் செய்த குற்றத்திற்குரிய தண்டனை அவ னுக்கு வழங்கப்பட்டது. அந்த மனிதன் நீதிபதியை யார் என்று அறிந் திருந்தும் அவன் வாழ்வில் நீதியை கடைப்பிடிப்பதில் பெரிதான கவ னம் செலுத்தவில்லை. அதுபோலவே, “இயேசுவை எங்களுக்கு தெரி யும். அவர் எனக்கு சொந்தமானவர். நாங்கள் தொன்றுதொட்டு கிறி ஸ்தவர்கள்” என்று நாங்கள் கூறிகொள்வதுடன் நின்றுவிட முடியாது. கர்த்தராகிய இயேசுவை அறிந்தவன் அவரின் கட்டளைகளின் வழி யிலே அதிக கவனமுள்ளவனாக வாழ்வான். கர்த்தரை அறிந்தும் அவர் கட்டளைகளின் வழியில் வாழாதவன் அவரை தன் வாழ்வில் மறுதலி க்கின்றவனாக இருக்கின்றான். கர்த்தருடைய ஆலோசனையை தள்ளு கின்றவன் பொல்லாப்புகளில் தன் வாழ்வை சிக்க வைத்து கொள் வான். முடிவிலே அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குள்ளாவான். உலகமா னது இரட்சிக்கப்படுவதற்காகவே இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். எனவே நித்திய ஆக்கினையை எங்களுக்கு நாங்களே வருவித் துக் கொள்ளாமல், பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை எங்கள் வாழ்வில் நிறைவேற்றும்படிக்காய் நாம் தேவ வார்த்தையில் நிலைத்திருப்போம்.

ஜெபம்:

நீதியின் தேவனே, நான் உம்மை அறிந்திருக்கின்றேன் என்று சொல்லி, நீதியின் வழியை புறக்கணிக்கின்றவனா(ளா)ய் வாழாதபடிக்கு, உம்முடைய சித்தத்ததை என் வாழ்வில் நிறைவேற்ற எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:21