புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 07, 2020)

என் உள்ளத்தின் நினைவுகள்

கொலோசெயர் 3:1

நீங்கள் கிறிஸ்துவுடன் கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.


உத்தமனும் நீதிமானாகவும் வாழ்ந்து வந்த ஒரு கிராமத்தின் அதிகாரி (Mayor) தான் செய்யும் வேலையில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தான். அந்த கிராமத்திலும், அதை அண்டிய பல பட்டண ங்களிலும் அந்த அதிகாரி ஜனங்கள் மத்தியில் மிகவும் நல்மதிப்பு பெற்றவனாகவும், அவனுடைய வார்த்தைகள் ஜனங்கள் மத்தியிலே கனம் பெற்றதாகவும் இருந்து வந்தது. ஒரு நாள், அந்த அதிகாரியை சந்திக்கும்படிக்கு, நாட்டின் தலைநகரிலிருந்து ஒரு செல்வந்தர் வருகை தந்திருந்தார். அந்த கிராமத்தின் அபிவிருத்திக்காக பெருந்தொகை பணத்தை கொடுப்பத ற்கு உறுதிமொழி (Pledge) பூண்டார். சில மணி நேரங்கள் கலந்துரையாடிய பின்பு, கிராமத்திலிருந்த பூங்காவின் எதிர்பக்கத்திலுள்ள வயல் நிலத்தில், தன் தொழிற்சாலையை நிறுவும்படி க்கு, எப்படியாவது அரச அதிகாரி களிடமிருந்து அனுமதி (Permit) பெற்றுத் தரும்படி கேட்டார். கிராமத்தின் அதிகாரி அந்த செல்வந்தரை நோக்கி: மன்னிக்கவும், நீங்கள் எதிர்பார்த்து வந்திருக்கும் இந்தக் காரியம் கைகூடி வரப்போவதில்லை. கிராமத்தின் நலனு க்கு எதிராக எந்த காரியத்தையும் நான் செய்யப் போவதில்லை என்று திட்டமாக கூறினார். பிரியமானவர்களே, தவறான நோக்கங்கள் எவ்வளவு உயர்ந்த வெகுமதிகளோடு வந்தாலும், அவை நீதிமான்களிடம் செல்லுபடியாகப் போவதில்லை. அதே போல நாங்கள் யாராக இருந்தாலும், தவறான நோக்கங்களுக்காகவும், இழிவான ஆதாயங்களுக்காகவும் தேவனை தேடுகின்றவர்களாக இருக்கக்கூடாது. இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களா யிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்க ளாயிருப்போம். இந்த உலகத்திலே எங்களைக் குறித்ததும், எங்கள் குடும்பத்தைக் குறித்ததுமான சுய குறிக்கோள் நிறைவேற வேண்டும் என்ற நோக்கமுடையவர்களாக வாழக் கூடாது. இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவன் எங்கள் உள்ளத்தின் நினைவுகளை அறிந் திரு க்கின்றார். பரலோகத்திற்குரிய மேலான, அழியாத, நித்தியமான ராஜ் யத்தை சுதந்தரித்துக் கொள்வதையே நோக்கமாக கொண்டு வாழ வேண்டும்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, என் தவறான எண்ணங்கள் நிறைவேறும்படிக்காய் கிரியைகளை நடப்பிக்காமல், பரலோகத்திலுள்ள மேலானவைகளை தேட உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 4:3