புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 06, 2020)

நிபந்தனையற்ற அர்ப்பணிப்பு

லூக்கா 1:38

அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்.


இயேசுவின் தாயாகிய மரியாளின் அர்ப்பணிப்பைக் குறித்து இன்று நாங்கள் பெருமிதமாக பேசிக் கொள்கின்றோம். ஏனெனில் அந்த தாயா ருடைய வாழ்க்கையை ஒரு கதையைப் போல ஒரு சில மணித்தியா லங்களில் வாசித்து முடித்து விடுகின்றோம். அதாவது, தேவ தூதன் மரியாளிடம் வந்து, நீ ஸ்திரிகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்ற மங்களகரமான வார்த்தையை கூறி, உன்னிடத்தில் மெசியா பிறப்பார் என்று கூறினான். அதன்படி நாட்கள் நிறை வேறிய போது இயேசு பிறந்தார். முப் பது வயதாகிய போது இயேசு ஞான ஸ்நானம் எடுத்தார். தம்முடைய பூலோக திருப்பணியை முடித்து, சிலுவையிலே மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழு ந்தார். பின்பு அவர் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பிதாவாகிய தேவனின் வலது பாரிசத்திலே வீற்றி ருக்கின்றார். இந்த, தேவனுடைய அநாதி திட்டம் நிறைவேறும்படிக்கு உன்னதமான பாத்திரமாக மரியாள் பயன்படுத்தப்பட்டாள் என்று இன்று நாங்கள் அறிந்திருக்கின்றோம். ஆனால், அன்று அந்த கன்னிகையான மரியாள் இவை யாவும் எப்படியாக நிறைவேறும் என்பதை அறிந்திருக்கவில்லை. அப்படியிருந்தும், தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்பதை விசுவாசித்து, அவருடைய சித்தம் தன்னில் நிறைவேறும்படிக்கு தன்னை ஒப்புக் கொடுத்தாள். இன்று, தம்முடைய வார்த்தை வழியாக தேவன் எங்களோடு பேசுகின்றார். அந்த வார்த் தையை கேட் டு, அதன்படி ஒரு நாள் கூட பொறுமையாக இருப்பதற்கு எம்மில் சிலர் கஷ்டப்படுகின்றார்கள். பிரியமானவர்களே, எங்களுடைய நிலையை சற்று ஆராய்ந்து பார்ப்போம். விசுவாசமில்லாமல் நாங்கள் தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ முடியாது. அதாவது, தேவனு டைய வார்த்தையை நம்பி ஏற்றுக் கொள்வதுடன் நின்றுவிடுவது விசுவாசம் அல்ல. கிரியையில்லாத விசுவாசம் செத்தது. இயேசுவின் தாயாகிய மரியாளைப் போல, தேவ வார்த்தையை நாங்கள் ஏற்றுக் கொண்டு, முற்றிலுமாய் எங்களை அர்ப்பணித்து, வருடங்கள் கால ங்கள் கழிந்தாலும், அவமானங்கள் நிந்தைகளை சந்திக்க நேரிட்டா லும், பாதை கஷ்டமாக இருந்தாலும், தேவன் சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவார் என்ற விசுவாசத்துடன், தேவ சித்தம் எங்களில் நிறைவேறும்படி பொறுமையுடன் நாம் காத்திருக்க வேண்டும்.

ஜெபம்:

பரலோக தேவனே, இந்த உலகிலே வாழும் நாட்களிலே உம் முடைய வார்த்தையை விசுவாசித்து, அதன்படி என் வாழ்வை பூரண அர்ப்பணிப்போடு வாழ எனக்குப் பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:5