புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 03, 2020)

நீ குணப்பட்ட பின்பு...

லூக்கா 22:32

நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக் கொண்டேன்: நீ குணப்பட்டபின்பு உன் சகோ தரரை ஸ்திரப்படுத்து என்றார்.


ஒரு தேசத்திலுள்ள பிரசித்திபெற்ற மனிதன் ஒருவன், ஒரு குறிப்பிட்ட வர்த்தகச் சின்னத்தில் (Brand Name) உற்பத்தியாக்கப்படும் கை மருந்துப் பொருளொன்றை விளம்பரப்படுத்துவதற்கு குறிப்பிட்ட உற்பத்தியாளருடன் உடன்படிக்கை செய்து கொண்டான். அந்த கை மருந்தை அவன் உண்மையாக வீட்டிலே உபயோகிக்கலாம் அல்லது உபயோகிக்காமல் இருக்கலாம் ஆனால் குறிப்பிடப்பட்ட அந்த வர்த்தக சின்னத்தின்; கீழ் உற்பத்தியாக்கப்படும் அந்த கை மருந்தை அவன் தன் உடல் ஆரோக்கியத்திற்காக உபயோகிப்பதைப் போலவும், அதை வாடிக்கை யாளர்களுக்கு பரிந்துரை (Recommend) அளிப்பதுபோலவும் விளம்பரத்திலே காட்சிப்படுத்தப்படல் வேண்டும். ஒருவேளை, அந்த குறிப்பிட்ட கை மரு ந்து உண்மையிலேயே தேக ஆரோக்கியத்திற்கு அதி சிறந்ததாக இரு க்கலாம். ஆனால் அதை அவன் தான் உட்கொள்ளாமல், அதை வாடி க்கையாளர்களுக்கு பரிந்துரை அளிப்பதினால் அந்த கை மருந்தினால் அவனுக்கு ஏற்படும் நன்மை என்ன? சிந்தித்துப் பாருங்கள். ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதே பிதாவாகிய தேவனுடைய அநாதித் தீர்மானம். எனவே எங்களுடைய அழைப்பு, அந்த விளம்பர உடன்படிக்கையைப் போன்ற அழைப்பு அல்ல. இயேசுவின் பிரதான சீஷனாகிய பேதுரு என்பவர், பெரும் சோதனையில் அகப்பட்டுக் கொள்ளப் போகின்றார் என்று இயேசு அறிந்திருந்தார். இயேசு அவரை நோக்கி: நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். அதா வது, முதலாவது நான் குணமடைய வேண்டும் நான் தேவனு டைய பிரமாணங்களின் வழியில் நடக்க என்னை ஒப்புவிக்க வேண் டும். எங்கள் ஆத்துமா கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி கர்த்தராகிய இயேசு பாடுகளை ஏற்றுக் கொண்டு, தம்மைத் தாமே பலியாக ஒப்புக் கொடுத்தார். எனவே நாங்கள் எங்கள் வழிகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். எங்கள் திருவுணவாகிய வேத வார்த்தைகளை வாசித்து, தியானித்து, அவைகளின் வழியிலே நடப்ப தில் நாங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து பெருக வேண்டும்.

ஜெபம்:

அன்பின் தேவனே, எனக்கு அல்ல மற்றவனுக்கே மனமாற்றம் தேவை என்ற எண்ணம் எனக்குள் ஒருபோதும் வராதபடிக்கு, நான் நாளுக்கு நாள் உம்முடைய சாயலில் விருத்தியாக என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:22