புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 02, 2020)

கர்த்தருடைய கரத்தின் கிரியை

ஏசாயா 64:8

இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவ ரும் உமது கரத்தின் கிரியை.


பல ஆண்டுகளாக பிரபல்யமான ஒரு வைத்திய நிபுணராக சேவை செய்து, ஓய்வு பெற்ற மனிதன், தன் பாடசாலையின் ஆரம்ப நாட்களை பின் னிட்டு பார்த்தான். ஆரம்ப நாட்களிலே, பாலர் பாடசாலையின் ஆசிரியை, எவ்வளவு அர்ப்பணிப்போடு சேவையாற்றினார் என்பதை உவகை நிறைந்த உள்ளத்தோடு எண் ணிப் பார்த்தான். தான் நாட்டிலே பிர பல்யமான வைத்தியர் என்ற பெயரை யும், பட்டத்தையும், கனத்தையும் நன் மதிப்பையும் பெற்றுக் கொண்டது உண் மை. ஆனால், தான் அந்த நிலையை அடைவதற்கு எத்தனையோ மனிதர் கள் உகந்த பாத்திரங்களாக பயன்ப டுத்தப்பட்டார்கள் என்பதை நன்கு உண ர்ந்து கொண்டான். அந்த பாலர் வகு ப்பு ஆசிரியை இன்று பூவுலகில் இல் லாதிருந்தாலும், அந்த அருமையான ஆசிரியை தான் அழைக்கப்பட்ட அழை ப்பை அர்ப்பணிப்போடு செய்ததால், அவருடைய பிரயாசத்தின் பலன் இவ்வுலகில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கொத்ததாகவே, குறிப்பிட்ட சில தாய்மார்கள் உலகத்தை கலக்கிய பெரும் தேவ ஊழி யர்களை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டார்கள். இவ்வண்ணமா கவே நாங்கள் ஒவ்வொருவரும் தேவனாகிய கர்த்தருடைய கரத்தின் கிரியைகளாக இருக்கின்றோம். எங்கள் அழைப்பு, இந்த உலகத்தின் பார்வையின்படி சிறிதான காரியமாகவோ அல்லது பெரியதான காரி யமாகவோ அல்லது ஒரு பொருட்டாகவோ எண்ணப்படாதிருக்கலாம். ஆனால் தேவன் எந்த நோக்கத்திற்காக எங்களை அழைத்தாரோ, அந்த நோக்கம் எங் களில் நிறைவேறும்படிக்காய் நாங்கள் எங்களை அர்ப்பணிக்க வேண்டும். இந்த உலகமும் அதன் வாழ்க்கையும் ஒழி ந்து போகும், ஆனால் பிதாவாகிய தேவனின் சித்தத்தை தங்கள் வாழ் க்கையில் நிறைவேற்றும் மனிதர்கள் என்றென்றும் அழியாத நித்திய வாழ்க்கையை சுதந்தரித்துக் கொள்வார்கள். எனவே, மற்றவர்களோடு எங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டு, எங்கள் வாழ்வின் நோக்கத்தை விட் டு அகன்று போகாதபடிக்கு, நாம் கர்த்தருடைய கரத்தின் அதிசய மான கிரியைகள் என்பதை உணர்ந்தவர்களாக எங்களை கர்த்தருடைய சமுகத்திலே தாழ்த்துவோம். அவர் அழைப்பின் நோக்கத்தை நிறை வேற்றுவோம்.

ஜெபம்:

அன்பின் பரலோக பிதாவே, நீர் என்னை நம்பித் தந்த பொறு ப்பை நான் உம்முடைய சித்தப்படி நிறைவேற்றி முடிக்கத்தக்கதாக பெலனை தந்து, என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 1:10