புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 01, 2020)

தேவனுக்கேற்ற இருதயம்

மல்கியா 3:3

அவர்கள் கர்த்தருடைய வர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளி யைப்போலவும் புடமிடுவார்.


தன் தந்தையாரோடு கொல்லனுடைய பட்டறைக்கு சென்ற சின்ன மக னானவன், அங்கு எப்படியாக இரும்;புக் கம்பிகளை நெருப்புச் சூளை யிலே போட்டு, காய்ச்சி, அடித்து, வளைத்து வடிவமைக்கின்றார்கள் என்ற படிமுறையை சற்று தொலைவில் நின்று ஆச்சரியத்தோடு கவனித்துக் கொண்டிருந்தான். அவர்கள் வீடு திரும்பும் போது, அப்பா, ஏன் அந்த மனிதன் இரும்புக் கம்பிகளை எரிகி ன்ற நெருப்புச் சூளைக்குள் போடுகி ன்றார் என்று மகன் தன் தந்தையி டம் கேட்டான். மகனே, இரும்பு மிகவும் கடினமானது, அதை உபயோகித்து ஏதாவது வடிவமைப்பை செய்வதற்கு, அது இயல்பாக வளைந்து கொடுக்க மாட்டாது. ஆனால் அதை நெருப்பில் போடும் போது, அது தன் கடினத்தை இழந்து போவதால், கொல்லன் அதை தனக்கு வேண்டிய பிரகாரமாக வளை த்து வடிவமைத்துக் கொள்வான் என்று தந்தை பதிலளித்தார். இந்த சம்பவத் தை எங்கள் வாழ்க்கையோடு ஒப்பி ட்டு சற்று சிந்தித்துப் பார்ப்போம். பல முறை அறிவுரை கூறப்பட்டும் தன் வழிகளை ஆராய்ந்து பார்த்து மனந்திரும்ப மனதில்லாமல், இது என்னுடைய கொள்கை, இது என்னுடைய தத்துவம், இது என்னு டைய வாழ்க்கை என்று எங்கள் இருதயத்தை நாங்களே இரும்பைப் போல கடினப்படுத்தக் கூடாது. அப்படியாக சுய கௌரவத்தினால் கடி னப்பட்ட இருதயம் தேவனுக்கு உகந்த வாசனையைக் கொடுக்கும் இரு தயம் அல்ல. இந்த இருதயம் இரும்பைப் போல கடினப்பட்டிருப்ப தால், அந்த இருதயத்தை பயனுள்ள கருவியாய் மாற்றியமைப்பத ற்கு அது புடமிடப்பட வேண்டும். அந்த அனுபவம் மிகவும் கடினமா யிருக்கும். ஒரு வேளை எங்கள் இருதயம் தேவனுக்கு பிரியமில்லாத ஏதாவது காரியம் ஒன்றில் வைராக்கியமாயிருந்தால் அதை இன்றே விட்டுவிடுவது நல்லது. அல்லது அநேக காலமாக மனம் கடினப்பட்டு, இப்போது வாழ்க்கை புடமிடப்பட்டுக் கொண்டிருந்தால், அந்த படிமு றையின் பலன் நன்மையாக இருக்கும்படிக்காய், உள்ளான மனிதன் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்த சுபாவங்களை அடையும்படி விட்டுக் கொடுங்கள். நாங்கள் எப்போதும் தம்முடையவர்களாக இருக்கும்ப டியே கர்த்தர் விரும்புகின்றார்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, உமக்கெதிராக முரட்டாட்டமும் வைராக்கியமும் என்னில் குடிகொள்ளாதபடிக்கு, உமக்கு உகந்த வாசனையான வாழ்க்கை வாழ என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 51:7