புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 31, 2020)

தேவ நீதி எங்களில் நிறைவேறட்டும்

எபிரெயர் 12:2

அவர் (இயேசு) தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.


“தெரியாத்தனமாக இந்த ஒப்பந்தத்திற்குள் மாட்டிக் கொண்டுவிட்டேன், சாமர்த்தியமாக இதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்” என்று ஒரு மனிதன் கூறிக் கொண்டான். இன்றைய உலகிலே இப்படிப்பட்ட கூற்றுக்கள் பொதுவாக மனிதர்களின் வாழ்வில்; வழக்கமானதாக இரு க்கின்றது. எங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கைக் காலத்திலும் நாம் ஒவ்வொருவரும் பல உடன்படி க்கை களை செய்து கொள்கின்றோம். திரு மண உடன்படிக்கை மற்றும் தொழிற் சாலையிலே, பாடசாலைகளிலே, சபை ஐக்கியங்களிலே இணைந்து கொள்ளு ம்போது அங்கே ஒப்பந்தங்களை ஏற் படுத்திக் கொள்கின்றோம். ஒவ்வொரு ஒப்பந்தங்களிலும் ஒழுங்கு முறைகள் உண்டு. அந்த ஒப்பந்தத்துக்குள்;; பிரயா சங்கள், பாராட்டுக்கள், சவால்;கள், முறையீடுகள், கருத்துமுரண்பாடுகள் ஏற்படுவது சகஜம். இப்படிப்பட்ட நிக ழ்வுகளை தவிர்த்துக் கொள்ளும்படி க்கு மனிதர்கள் தற்போதிருக்கும் ஒப் பந்தங்களை உடைத்து, புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள் கின்றார்கள். இந்த உலகிலே நாங்கள் வாழும்வரைக்கும் எந்த ஒப்ப ந்தத்திலும் மேற்கூறப்பட்ட நிகழ்வுகளை முற்றாக தவிர்த்துக் கொள்ள முடியாது. நீங்கள் வேலை செய்யும் இடத்திலே, புதிதாக இணைந்த ஒரு ஊழியர் அங்கே இருக்கும் நல்லுணர்வை குலைத்துப் போட லாம். எந்த ஒரு சபை ஐக்கியத்திலும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட லாம். இவைகளை தவிர்த்துக் கொள்ளும்படிக்கு மனிதர்கள் ஒப்பந்த ங்களை முற்றாக தவிர்த்துக் கொள்ள முயற்சி செய்கின்றார்கள். ஒப்ப ந்தத்தை செய்து கொண்டவர்கள் சாமர்;த்தியமாக அதை உடை த்துக் கொள்ளும் வழிகளை தேடுகின்றார்கள். ஒப்பந்தங்களை உடை த்துக் கொள்ள முன்பு, எங்கள் பாவங்களை பரிகரிக்கும் படிக்காய் புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இந்த உலகத்திற்கு வந்த கர்த்தரா கிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். அவமானத்தை எண் ணாமல் சிலுவையை ஏற்றுக் கொண்டார். என்னுடைய சித்தம் அல்ல உம்முடைய சித்தமே என்னில் நிறைவேறட்டும் என்று பிதாவிடம் தம்மை ஒப்புக் கொடுத்தார். அதே போலவே நாங்களும் எங்களை பிதாவின் சித்தத்திற்கு முழுமையாக ஒப்புக் கொடுத்து வாழ்வோம்

ஜெபம்:

நீதியின் தேவனே, உம்முடைய பிள்ளைகளாக அழைக்கப்பட்ட நாங்கள், ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் தேவ நீதியை எங்களில் நிறைவேற்றி முடிக்க அருள் புரிவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக் கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 22:42