புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 30, 2020)

தேவ ஆலோசனைகளை தள்ளிவிடாதிருங்கள்

1 பேதுரு 2:16

சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.


அந்நிய தேசத்தில், ராஜ அரண்மனையிலே ராஜாவிற்கு சேவை செய் யும்படி தன் சொந்த தேசத்திலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டு போக ப்பட்டது, வாலிபனாகிய தானியேலின் சொந்தமான தெரிவோ தீர்மா னமோ அல்ல. தானியேல் அப்படிப்பட்ட சூழ்நிலைக்குள் பலவந்தமாக தள்ளப்பட்டிருந்தான். ராஜ்யபாரம் மாறி ப்போனபோதும், தேவனுக்கு பயந்திரு ந்த தானியேல் எப்போதும் தேவனு க்கு பிரிமுள்ளவனாகவே இருந்தான். இன்றைய நாட்களிலே பலர் தானியே லின் வாழ்க்கையை மேற்கோட்காட்டி “ தானியேல் அந்நிய தேவர்களை ஆராதி க்கும், முன் பின் அறியாத தேசத்தின் அரண்மனையிலே சேவை புரிந்து வந் தான்” ஆதலால், நானும் “அந்நிய இட ங்களுக்கு சென்று அங்கு வேலை பார் ப்பதில் தவறில்லை” என்று கூறிக் கொள்வார்கள். அப்படி நீங்கள் உங்கள் வாழ்வில் தீர்மானம் எடுத்துக் கொண்டால் அதை யாரும் தடுத்து நிறுத்தப் போவதில்லை. அதை செய்வதற்கு உங்களுக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் நீங்கள் தீர்மானம் எடுக்க முன்பு பின்வ ரும் காரியங்களை கருத்தில் கொள்வது நல்லது. 1. தானியேல் அந் நிய தேசத்திற்கு சிறைபிடித்து கொண்டு செல்லப்பட்டான். அது அவ னுடைய தெரிவு அல்ல. 2. தானியேல் தேவ பயமுள்ள வாலிபன் எனவே அவன் தன் சொந்த தேசத்திலே கீழ்படிவுள்ளவனாகவே வாழ்ந் திருப்பான். 3. தானியேல் தேவனுடைய காரியங்களில் சமரசம் செய் யாத வைராக்கியமுள்ள வாலிபன். 4. கர்த்தர் தானியேலுக்கு விசே ~pத்த ஆவியை கொடுத்திருந்தார். 5. தினம் மூன்று வேளை ஜெபம் செய்து தேவனை ஸ்தோத்தரிப்பது தானியேலின் வழக்கமாயிருந்தது. 6. தானியேலை குற்றப்படுத்த பல அதிகாரிகள் அயராது உழைத்தா ர்கள் ஆனாலும் குற்றம்பிடிப்பதற்கு எந்த முகாந்திரமும் இருக்கவி ல்லை. 7. தானியேல், பதவியாசையோ பொருளாசையோ இல்லாத வாலிபன். எனவே உங்கள் வாழ்வில் தற்போது இல்லாத சூழ்நி லையை, நீங்களாகவே உங்களுக்கு உருவாக்கிக் கொள்ள கூடாது. கருப்பொருளாவது, நாங்கள் தீர்மானம் எடுக்கும்படி தேவன் எங்களு க்கு சுயாதீனத்தை கொடுத்திருக்கின்றார். அதே நேரத்திலே சபையில் மேலான அதிகாரங்களை ஈவாக கொடுத்திருக்கின்றார். எனவே, தேவ ஆலோசனைகளை கேட்டு தீர்மானங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, நீர் எனக்கு தந்த சுயாதீனத்தை, என் கண் போன போக்கில் முடிவுகளை எடுக்க பயன்படுத்தாதபடிக்கு, நீர் ஈவாக தந்த அதிகாரங்களுக்கு கீழ்ப்படிந்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 19:20